அமீரக செய்திகள்

அமீரகத்தில் அடுத்து வரவிருக்கும் நீண்ட ஈத் விடுமுறை…!! எப்போது..?? எத்தனை நாட்கள் விடுமுறை கிடைக்கும்..??

ஐக்கிய அரபு அமீரக குடியிருப்பாளர்களுக்கு விரைவிலேயே அடுத்த நீண்ட விடுமுறை கிடைக்கப்பெற உள்ளது. இந்த மாத ஆரம்பத்தில் ஈத் அல் ஃபித்ரை முன்னிட்டு நீண்ட நாட்கள் விடுமுறையை குடியிருப்பாளர்கள் கழித்த நிலையில் வரும் ஜூலை மாதத்தில் ஈத் அல் அத்ஹாவிற்காக இதேபோல் நீண்ட நாட்கள் விடுமுறை வழங்கப்படவுள்ளது. இது வழக்கமானதுதான் என்றாலும் இந்த வருட ஈத் அல் அத்ஹா எப்போது?? எத்தனை நாட்கள் விடுமுறை?? என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

ஈத் எப்போது?

அமீரகத்தில், இஸ்லாமிய பண்டிகையான ஈத் அல் அதாவின் தேதிகள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. இது பிறை பார்ப்பதன் மூலம் தீர்மானிக்கப்படுகிறது. இருப்பினும், வானியல் கணக்கீடுகளின் அடிப்படையில் சாத்தியமான தேதிகள் கணிக்கப்பட்டுள்ளது. ஈத் அல் அதா அல்லது தியாகத்தின் திருநாள் என கூறப்படும் ஹஜ் பெருநாள் இஸ்லாமிய மாதமான துல்ஹஜ் 10 அன்று கொண்டாடப்படுகிறது.

எமிரேட்ஸ் வானியல் சங்கத்தின் இயக்குநர்கள் குழுவின் தலைவர் இப்ராஹிம் அல் ஜார்வானின் கூற்றுப்படி, ஜூலை 9 சனிக்கிழமை, ஈத் அல் அதாவின் முதல் நாளாக இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈத் விடுமுறை?

ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிகாரப்பூர்வ விடுமுறை நாட்காட்டியின்படி, அரஃபா நாள் – ஈத் அல் அதாவுக்கு முந்தைய நாளில் குறிக்கப்படுகிறது. பொதுவாகவே இந்த நாள் விடுமுறையாக இருக்கும். எனவே, குடியிருப்பாளர்கள் இஸ்லாமிய மாதத்தின்படி துல் ஹஜ் 9 முதல் 12 வரை நான்கு நாள் விடுமுறையை அனுபவிப்பார்கள்.

வானியல் கணக்கீடுகளின்படி, இது ஜூலை 8 வெள்ளிக்கிழமை முதல் ஜூலை 11 திங்கள் வரை இருக்கலாம் என கூறப்படுகிறது. அதாவது 2022ம் ஆண்டு ஈத் அல் அதாவுக்காக ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள பொது மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு இது நான்கு நாள் வார விடுமுறை நாட்களாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு வேறு ஏதேனும் விடுமுறைகள் உள்ளனவா?

ஐக்கிய அரபு அமீரக விடுமுறைகள் பட்டியலில் ஈத் அல் அதாவுக்குப் பிறகு வார இறுதி விடுமுறை அல்லாது மேலும் சில விடுமுறைகள் குறிப்பிடுகிறது. இஸ்லாமிய புத்தாண்டு மற்றும் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் பிறந்தநாளுக்கான விடுமுறை சனிக்கிழமைகளில் வரக்கூடும், எனவே அவை நீண்ட வார இறுதி விடுமுறை நாட்களாக இருக்காது.

அதனைத் தொடர்ந்து, தியாகிகள் மற்றும் தேசிய தினங்களைக் குறிக்கும் வகையில் குடியிருப்பாளர்கள் டிசம்பர் 1-3 தேதிகளில் விடுமுறையைப் பெறுவார்கள். இந்த ஆண்டு டிசம்பர் 4 ம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஆதலால் நான்கு நாட்கள் விடுமுறையை பெறுவார்கள் என கூறப்படுகிறது.

Related Articles

Back to top button
error: Content is protected !!