அமீரக செய்திகள்

அபுதாபியில் கேஸ் சிலிண்டர் வெடித்ததால் ஏற்பட்ட மாபெரும் தீவிபத்து..!! உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தகவல்..!!

அபுதாபியில் உள்ள உணவகத்தில் எரிவாயு சிலிண்டர் திடீரென வெடித்ததால் பெரும் தீவிபத்து நிகழ்ந்துள்ளது. தீவிபத்து நிகழ்ந்ததை அறிந்த தீயை அணைக்கும் பணியில் உள்ள அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

அபுதாபியின் அல் கலிதியா பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் இந்த சம்பவம் நடந்துள்ளதாக அபுதாபி காவல்துறை தெரிவித்துள்ளது.

மேலும் இந்த தீவிபத்தால் சில உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் அருகில் உள்ள கடைகளுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த கட்டிடத்தில் இருந்து குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்பட்டதாக காவல்துறையினர்  தெரிவித்துள்ளனர். இது குறித்த கூடுதல் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ சேனல்களை நம்பியிருக்கவும், தவறான தகவல்களைப் பரப்புவதைத் தவிர்க்கவும் குடியிருப்பாளர்களை அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

மேலும் சிவில் பாதுகாப்பு மற்றும் காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுத்து வருவதாக அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.

Related Articles

Back to top button
error: Content is protected !!