அமீரக செய்திகள்

மறைந்த அதிபருக்கான இறுதி தொழுகை அமீரகத்தின் அனைத்து மசூதிகளிலும் இன்று நடத்தப்படும்..!! அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!

ஐக்கிய அரபு அமீரக அதிபர் மாண்புமிகு ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யான் அவர்கள் இன்று மரணம் எய்தியதைத் தொடர்ந்து இன்று மசூதிகளில் இறுதி தொழுகை நடைபெறவிருக்கின்றன.

அமீரக அரசின் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, மஹ்ரிப் தொழுகைக்குப் பின் நடைபெறும் இந்த தொழுகையில் குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் இணைந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு அமீரக ஜனாதபதி விவகார அமைச்சகம் நாட்டின் ஜனாதிபதி இன்று மரணமடைந்ததை தொடர்ந்து அதிகாரப்பூர்வமாக 40 நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என அறிவித்துள்ளது. இந்த நாட்களில் அமீரக தேசிய கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும்.

அத்துடன் உள்ளாட்சி மற்றும் மத்திய அரசு நிறுவனங்கள், அமைச்சகங்கள் மற்றும் தனியார் அலுவலகங்கள் நாளை சனிக்கிழமை முதல் மூன்று நாட்களுக்கு மூடப்படும் மற்றும் செவ்வாய்கிழமை பணி மீண்டும் தொடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
error: Content is protected !!