வளைகுடா செய்திகள்

உலகளவில் மிக குறைந்த விலையில் பெட்ரோலை விற்கும் நாடுகளில் முதல் வரிசையை பிடித்த வளைகுடா நாடு..!!

உலகெங்கிலும் பெட்ரோல், டீசல் விலையானது ஜெட் வேகத்தில் உயர்ந்து கொண்டிருக்கும் நிலையில் மிக குறைந்த விலையில் பெட்ரோலை விற்கும் நாடுகளும் இருக்கத்தான் செய்கின்றது. அதிலும் உலகளவில் மிக குறைந்த விலையில் பெட்ரோலை விற்கும் நாடுகளில் வளைகுடா நாடுகளில் ஒன்றான குவைத் ஆறாவது இடத்தைப் பிடித்துள்ளது.

குவைத்தில் ஒரு கேலன் (gallon) பெட்ரோலின் விலை $1.57 (5.77 திர்ஹம்) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன்படி இந்திய மதிப்பில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை கிட்டத்தட்ட 26 ரூபாய் ஆகும். குவைத்தை போல லிபியா, ஈரான், சிரியா மற்றும் அல்ஜீரியா உள்ளிட்ட ஐந்து அரபு நாடுகளும் மிகவும் மலிவு விலையில் பெட்ரோலை விற்கும் பத்து நாடுகளில் அடங்கும்.

வெனிசுலா உலகின் மலிவான விலையில் பெட்ரோலை விற்பனை செய்றகிது. அங்கு ஒரு கேலன் $0.11 விலைக்கு நிர்ணயிக்கப்பட்டு உலகளவில் முதலிடத்தில் உள்ளது. உலகளவில் சராசரியான பெட்ரோல் விலையை விட $5.95 இது மலிவானதாகும்.

அதனைத் தொடர்ந்து, லிபியா இரண்டாவது இடத்தில் உள்ளது. லிபியாவில் ஒரு கேலன் விலை $0.15 மட்டுமே ஆகும். மூன்றாவது மலிவான எரிபொருள் விலையைக் கொண்டுள்ள ஈரான் நாடானது ஒரு கேலனுக்கு $0.23, நான்காவது நாடான சிரியா ஒரு கேலனுக்கு $1.08 மற்றும் குறைந்த விலையில் பெட்ரோலை விற்பதில் ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ள அல்ஜீரியா $1.20 விலையிலும் பெட்ரோலை நிர்ணயித்துள்ளன.

எரிவாயு விலை அதிகம் உள்ள முதல் 3 நாடுகளில் ஹாங்காங் முதல் இடத்தில் உள்ளது, அதைத் தொடர்ந்து நெதர்லாந்து மற்றும் நார்வே உள்ளன. ஹாங்காங்கில் ஒரு கேலன் பெட்ரோலின் விலை $13.10 ஆகும். இது உலக சராசரி பெட்ரோலை விட இரண்டு மடங்கு மற்றும் அதிக விலையில் பெட்ரோலை விற்கும் இரண்டாவது நாட்டை விட $1.15 அதிகம் ஆகும்.

நெதர்லாந்தில் பெட்ரோல் விலை ஒரு கேலன் $11.75 மற்றும் நார்வேயில் $11.36 என விற்பனை செய்யப்படுகிறது.

வெனிசுலா, லிபியா மற்றும் ஈரான் ஆகிய மூன்று நாடுகளில் மட்டுமே ஒரு கேலன் எரிபொருளின் விலை ஒரு டாலருக்கும் குறைவாக உள்ளது. ஹாங்காங், நெதர்லாந்து, நார்வே மற்றும் மொனாக்கோ ஆகிய நான்கு நாடுகளில் மட்டுமே ஒரு கேலன் எரிவாயுவின் விலை $11க்கு மேல் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!