அமீரக செய்திகள்உலக செய்திகள்

UAE: பணியிடங்களுக்கே சென்று விசா ஸ்கிரீனிங் செய்யும் புதிய மொபைல் கிளினிக் வசதி துவக்கம்..!!

அபுதாபியில் பணிபுரியும் ஊழியர்கள் விசாவிற்கான மருத்துவ ஸ்கிரீனிங் எடுக்க அலைச்சல் இல்லாமல் எளிதிலேயே முடிப்பதற்கு ஒரு புதிய திட்டத்தை அதிகாரிகள் அறிவித்துள்ளனர். புதிதாக தொடங்கப்பட்டுள்ள திட்டத்தின்படி அபுதாபியில் ஊழியர்கள் தங்களின் பணியிடங்களுக்கே வரும் புதிய மொபைல் விசா ஸ்கிரீனிங் கிளினிக் மூலம் மருத்துவ ஸ்கிரீனிங்கை செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தின் மிகப்பெரிய ஹெல்த்கேர் நெட்வொர்க்கான அபுதாபி ஹெல்த் சர்வீசஸ் கம்பெனி (SEHA), இந்த முயற்சியானது பெருநிறுவனங்களுக்கான விசா ஸ்கிரீனிங் சேவைகளுக்கான அணுகலை மேம்படுத்துவதற்கான தொடர்ச்சியான முயற்சிகளுக்கு ஏற்ப வருகிறது என்று குறிப்பிட்டுள்ளது.

சேஹா ஆம்புலேட்டரி ஹெல்த்கேர் சர்வீசஸின் (AHS) தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் ஒமர் அப்துல்ரஹ்மான் அல் ஹாஷ்மி கூறுகையில்: “புதிய மொபைல் விசா ஸ்கிரீனிங் கிளினிக்கைத் தொடங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம், இது தற்போது 12 நோய் தடுப்பு மையங்களில் கிடைக்கும் எங்கள் சேவைகளை நிறைவு செய்கிறது. புதிய மொபைல் கிளினிக்கிலிருந்து பெரிய நிறுவனங்கள் பயனடையும், இது ஊழியர்களுக்கு அவர்களின் பணியிடத்தில் விசா ஸ்கிரீனிங் சேவைகளை வழங்கும், எனவே இது வேலையில் இருந்து விசாவிற்கான ஸ்கிரீனிங் மேற்கொள்ளும் நேரத்தை குறைக்கிறது. ஒவ்வொரு நிறுவனத்தின் தேவைகளுக்கும் ஏற்ப நாங்கள் மொபைல் கிளினிக்கை இயக்குவோம், மேலும் தேவைப்பட்டால் 24 மணிநேரமும் வார இறுதி நாட்களிலும் விடுமுறை நாட்களிலும் செயல்பட முடியும்” என தெரிவித்துள்ளார்.

இந்த மொபைல் கிளினிக்கில் இரண்டு பரிசோதனை அறைகள், இரண்டு எக்ஸ்ரே அறைகள், ஒரு ரத்த சேகரிப்பு அறை, 12 சேர்கள் கொண்ட இரண்டு காத்திருப்புப் பகுதிகள் உள்ளன. அத்துடன் ஒரு நபருக்கான பதிவு தொடங்கி பரிசோதனை, இரத்த சேகரிப்பு மற்றும் எக்ஸ்ரே என முழு பரிசோதனைக்கும் வெறும் 15 முதல் 30 நிமிடங்களே எடுக்கும் என கூறப்பட்டுள்ளது.

மேலும் சில நபர்கள் ஹெபடைடிஸ் தடுப்பூசியை எடுக்க வேண்டியிருக்கலாம் என்றும், இது மூன்று டோஸ்களில் கொடுக்கப்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் டோஸ் அதே நாளிலும் அடுத்தடுத்த டோஸ்கள் பிந்தைய தேதியில் கொடுக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. அதே போல் மருத்துவ ஸ்கிரீனிங் எடுத்துக் கொண்ட நபர்கள் தங்கள் முடிவுகளை எடுக்க மொபைல் கிளினிக்கிற்குத் திரும்ப வேண்டிய அவசியமில்லை. ஏனெனில் இவை அடையாளம், குடியுரிமை, சுங்கம் மற்றும் துறைமுக அதிகாரசபைக்கான ஃபெடரல் ஆணையத்தால் இயக்கப்படும் ஆன்லைன் நெட்வொர்க்கில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழக்கமான விசா ஸ்கிரீனிங்கிற்கு கூடுதலாக, தேர்ந்தெடுக்கப்பட்ட மையங்களில் ஃபாஸ்ட் டிராக் மற்றும் பிரீமியம் ஸ்கிரீனிங் சேவைகளும் வழங்கப்படுகின்றன. மொபைல் விசா ஸ்கிரீனிங் கிளினிக்கை முன்பதிவு செய்ய ஆர்வமுள்ள நிறுவனங்கள் [email protected] க்கு மின்னஞ்சல் அனுப்பலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விசா ஸ்கிரீனிங் மேற்கொள்ளவுள்ள தனிப்பட்ட நபர்கள் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட Seha Visa Screening அப்ளிகேஷன் மூலம்  அப்பாய்மென்டை பதிவு செய்யலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
error: Content is protected !!