அமீரக செய்திகள்

UAE: வேலையிழந்த வெளிநாட்டினருக்கும் பண உதவி அளிக்கும் புதிய காப்பீடு திட்டம்… துபாய் மன்னரின் அசத்தலான அறிவிப்பு..!!

ஐக்கிய அரபு அமீரகத்தின் பொது மற்றும் தனியார் துறைகளில் உள்ள தொழிலாளர்கள் அடுத்த ஆண்டு முதல் குடிமக்கள், வெளிநாட்டவர்கள் என்ற பாரபட்சமின்றி அனைவரும் வேலையின்மை காப்பீட்டை பெறுவார்கள் என்று அமீரகத்தின் மனித வளம் மற்றும் குடியேற்ற அமைச்சர் வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.

இது வேலை இழப்பு அபாயத்திலிருந்து ஊழியர்களைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்ட புதிய திட்டமாகும். இந்த திட்டத்தின் படி எதிர்பாராத சூழ்நிலையில் வேலை இழக்கும் ஊழியர்களுக்கு ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பண உதவி கிடைக்கும் என்று மனிதவள மற்றும் குடியேற்ற அமைச்சர் டாக்டர் அப்துல்ரஹ்மான் அல் அவார் உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்தத் திட்டம் தனியார் மற்றும் பொதுத் துறைகளில் உள்ள அனைத்து நாட்டினருக்கும் பொருந்தும் என்று கூறப்பட்டுள்ளது. அத்துடன் பணியிடத்தில் ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதே இதன் குறிக்கோள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த புதிய திட்டம் ஐக்கிய அரபு அமீரகத்தில் பெரும் சீர்திருத்தங்களின் ஒரு பகுதியாக வருகிறது என்றும், இது திறமைகளை ஈர்க்கவும் தக்கவைக்கவும் மற்றும் பணி ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தவும் நோக்கமாக உள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு அமீ்கத்தின் துணைத் தலைவரும் பிரதமரும், துபாய் ஆட்சியாளருமான ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம் அவர்கள், ஊழியர்களை வேலை இழப்பிலிருந்து பாதுகாப்பதற்காக இந்த திட்டத்தை சமீபத்தில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் அறிவித்தார்.

திடீரென்று வேலையை இழக்கும் காப்பீடு செய்யப்பட்ட நபருக்கு இந்தத் திட்டம் குறிப்பிட்ட காலத்திற்கு பண தொகையை வழங்கும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த திட்டமானது வேலைச் சந்தையில் எமிராட்டியின் போட்டித்தன்மையை மேம்படுத்துவதையும், சிறந்த சர்வதேச திறமையாளர்களை ஐக்கிய அரபு அமீரகத்திற்கு ஈர்ப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

மனித வளம் மற்றும் குடியேற்ற அமைச்சர் அப்துல்ரஹ்மான் அல் அவாரின் கூற்றுப்படி, ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள தனியார் மற்றும் பொதுத் துறைகளில் பணிபுரியும் அனைத்து தொழிலாளர்களுக்கும் வேறு வேலை தேடும் போது அவர்களுக்கு ஆதரவாக இந்த புதிய வேலையின்மை காப்பீட்டு அமைப்பு இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

இருப்பினும், முதலீட்டாளர்கள், வீட்டுப் பணியாளர்கள், தற்காலிக ஒப்பந்தம் கொண்ட தொழிலாளர்கள், 18 வயதுக்குட்பட்டவர்கள் மற்றும் ஓய்வூதியம் பெற்ற புதிய வேலையில் சேர்ந்த ஓய்வு பெற்றவர்கள் ஆகியோர் வேலையின்மை காப்பீட்டைப் பெறுவதற்கான தகுதி இல்லாதவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய இயக்கமானது தனியார் துறையில் எமிராட்டி தொழிலாளர்களை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது மற்றும் எமிராட்டிகளின் வேலைவாய்ப்பை ஆதரிக்கும் நிறுவனங்களுக்கு விருது வழங்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல் அடுத்த ஐந்து ஆண்டுகளில் தனியார் துறை பணியாளர்களில் 10 சதவீதம் பேர் எமிராட்டி குடிமக்களாக இருப்பதை உறுதி செய்யும் திட்டங்களை ஐக்கிய அரபு அமீரகம் அறிவித்துள்ளது. 

வேலைவாய்ப்பின்மை காப்பீட்டுத் திட்டம் வேலைச் சந்தையின் போட்டித்தன்மையை வலுப்படுத்துவதையும், வேலை இழப்பு ஏற்பட்டால் தொழிலாளர்களுக்கு ஆதரவை வழங்குவதையும், அனைவருக்கும் நிலையான பணிச்சூழலை ஏற்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Related Articles

Back to top button
error: Content is protected !!