வளைகுடா செய்திகள்

முதலாளிகள் தங்கள் தொழிலாளியை மற்றவர்களுக்காக வேலை செய்ய அனுமதித்தால் கடும் தண்டனை.. எச்சரிக்கை விடுத்த சவூதி அரேபியா..!!

சவூதி அரேபியாவில் ஊழியர்கள் தங்களின் முதலாளிகளிடம் மட்டுமே பணிபுரிய வேண்டும் என அரசு அனைத்து முதலாளிகளுக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதில் முதலாளிகள் தங்கள் தொழிலாளர்களை மற்றவர்களுக்காக அல்லது தொழிலாளர்களின் சொந்த நலனுக்காக வேலை செய்ய அனுமதிப்பதற்கு எதிராக எச்சரிக்கப்பட்டுள்ளன என்று சவுதி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சவூதியின் பொதுப் பாதுகாப்பு சட்டத்தின் படி, இந்த விதிகளை மீறி தங்கள் தொழிலாளர்களை மற்றவர்களுக்காக அல்லது தொழிலாளர்களின் சொந்த நலனுக்காக பணிபுரிய அனுமதிக்கும் எந்தவொரு தனிப்பட்ட முதலாளிகளும் குற்றவாளிகளாக கருதப்பட்டு அதிகபட்சமாக 100,000 சவூதி ரியால் அபராதம் மற்றும் ஆறு மாதங்கள் வரை சிறைத்தண்டனையுடன் தண்டிக்கப்படுவார்கள் என கூறப்பட்டுள்ளது.

கூடுதலாக ஐந்தாண்டுகள் வரை வேலைக்கு ஆட்சேர்ப்பிற்கும் தடை விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. சவூதி தொழிலாளர் சட்டம் எண் 219 இன் பிரிவு 39, ஒரு முதலாளி தனது பணியாளரை மற்றவர்களுக்காஎ வேலை செய்ய அனுமதிக்கக்கூடாது, மேலும் ஒரு தொழிலாளி மற்ற முதலாளிகளுக்கு வேலை செய்யக்கூடாது என கூறுகிறது.

இதேபோல், ஒரு முதலாளி மற்ற முதலாளிகளின் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தக்கூடாது. ஒரு முதலாளி தனது தொழிலாளர் அவரின் சொந்த நலனுக்காக  வேலை செய்யவில்லை என்பதையும் உறுதிப்படுத்த வேண்டும்.

மேலும் சவூதி அரேபியாவில் ரெசிடென்சி, தொழிலாளர் மற்றும் எல்லைப் பாதுகாப்பு ஆகியவற்றிற்கான விதிமுறைகளை எவரேனும் மீறினால் மக்கா மற்றும் ரியாத் பிராந்தியங்களில் 911 என்ற எண்ணிற்கும், நாட்டின் பிற பகுதிகளில் 999 என்ற எண்ணிற்கும் அதிகாரிகளிடம் புகார் செய்யுமாறு பொதுமக்களுக்கு அதிகாரிகள் அழைப்பு விடுத்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!