அமீரக செய்திகள்

அமீரகத்தில் 47°C ஐ எட்டும் வெப்பநிலை..!! வானிலை மையம் தகவல்..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் ஞாயிற்றுக்கிழமை வானிலையானது வெப்பமாகவும் தூசி நிறைந்ததாகவும் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இரவு 7.00 மணி வரை கடல் சீற்றமாக இருக்கும் எனவும் வானிலை மையம் எச்சலிக்கை விடுத்துள்ளது.

இன்றைய வானிலை முன்னறிவிப்பில் அமீரகம் முழுவதும் பகலில் சில நேரங்களில் வெப்பமாகவும் தூசி நிறைந்ததாகவும் இருக்கும். அத்துடன் நாட்டின் சில பகுதிகளில் வெப்பநிலை 47 ° C ஐ எட்டும் என்றும் தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM) தெரிவித்துள்ளது.

சில கடலோரப் பகுதிகளில் இரவு மற்றும் திங்கள் காலை வேளைகளில் ஈரப்பதம் இருக்கும் என கூறப்பட்டுள்ளது. பகலில் குறிப்பாக மேற்கு நோக்கி மிதமான முதல் வேகமாக வீசும் காற்றால் தூசி மற்றும் மணல் வீசும் என்றும் இதனால் பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
error: Content is protected !!