அமீரக செய்திகள்

கோலாகலமாக துவங்கவுள்ள ‘துபாய் சம்மர் சர்ப்ரைசஸ்’… 25 மணிநேர சிறப்பு விற்பனையில் பொருட்களுக்கு 90% வரை தள்ளுபடி..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் இருக்கும் துபாயில் ஒவ்வொரு வருட கோடைகாலத்தின் போதும் துபாய் சம்மர் சர்ப்ரைசஸ் (DSS) எனும் நிகழ்வானது விமரிசையாகக் கொண்டாடப்படும். இந்த வருடம் கோடைகாலம் ஆரம்பித்ததையொட்டி, ஜூலை 1 முதல் DSS-2022 ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த மாதம் ஆரம்பிக்கவிருக்கும் துபாய் சம்மர் சர்ப்ரைஸில் அடுத்த சில வாரங்களுக்கு நகரம் முழுவதும் உள்ள மால்கள் மற்றும் பொழுதுபோக்கு இடங்களில் அதிரடி விற்பனை, பொருட்களுக்கு தள்ளுபடி, ப்ரமோஷன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் பல்வேறு நிகழ்வுகள் நடக்கவிருக்கின்றன. இந்த ஷாப்பிங் கொண்டாட்டத்தின் வெள்ளி ஆண்டான 25 வது பதிப்பானது செப்டம்பர் 4 வரை இயங்கும் என்று கூறப்பட்டுள்ளது.

அத்துடன் DSS-ன் 25 வது பதிப்பை முன்னிட்டு 25 மணி நேர விற்பனையுடன் 90% வரை தள்ளுபடிகள் மற்றும் ஒரு மில்லியன் திர்ஹம்ஸ் ரொக்கமாக வழங்கும் ஒரு ரேஃபிள் டிரா போன்ற பல ப்ரொமோஷன்கள் நடத்தப்படவுள்ளன.  தொடக்க வாரத்தில், துபாய் திருவிழாக்கள் மற்றும் சில்லறை விற்பனை நிறுவனம் (DRE), Majid Al Futtaim (MAF) உடன் இணைந்து, 90% வரை தள்ளுபடி வழங்கும் முக்கிய சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் பிராண்டுகளைக் காண சிறப்பு 25 மணிநேர விற்பனையை நடத்தும் என கூறப்பட்டுள்ளது. இந்த   விற்பனையின் சரியான தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூடுதலாக, இந்த வாரத்தில், பொருட்களை வாங்குபவர்கள் 1000 பிராண்டுகள் மற்றும் 5000 சில்லறை விற்பனை நிலையங்களில் 25 முதல் 75 சதவீதம் வரை தள்ளுபடியைப் பெறலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

மேலும் துபாய் மாலில் 500 திர்ஹம் அல்லது அதற்கு மேல் செலவிடும் நபர்கள் ஒரு மில்லியன் திர்ஹம்கள் என்ற பெரிய பரிசை வெல்லும் வாய்ப்பைப் பெறுவார்கள். இது தவிர, ஷாப்பிங் செய்பவர்கள் DSS காலத்தில் நடத்தப்படும் எட்டு வாரக் குலுக்கல்களில் 25,000 திர்ஹம் மதிப்புள்ள Emaar கிஃப்ட் கார்டுகளை வெல்லலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

DFRE யின் தலைமை நிர்வாக அதிகாரி அகமது அல் காஜா கூறுகையில், “வருடாந்திர சில்லறை வர்த்தகத்தில் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட நிகழ்வுகளில் DSS ஒன்றாகும். இந்த வருடம் 10 வாரங்களுக்கு இதுவரை இல்லாத அளவில் மிகச் சிறந்த விற்பனை, பொருட்களுக்கு தள்ளுபடி, ப்ரொமோஷன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் பல்வேறு நிகழ்வுகளை வழங்கவிருக்கின்றது” என கூறியுள்ளார்.

Related Articles

Back to top button
error: Content is protected !!