வளைகுடா செய்திகள்

ஈத் அல் அத்ஹாவிற்கு 9 நாட்கள் விடுமுறையை அறிவித்த வளைகுடா நாடு.. அமீரகத்திற்கு எத்தனை நாட்கள்..?

குவைத்தில் ஈத் அல் அதா (ஹஜ் பெருநாள்)-ஐ முன்னிட்டு ஒன்பது நாட்கள் விடுமுறை அளிக்கப்படுவதாக அந்நாட்டு அமைச்சரவைக் குழு அறிவித்துள்ளது.

குவைத்தின் அமைச்சரவைக் குழு அறிவிப்பின்படி, அனைத்து பொது நிறுவனங்கள், அமைச்சகங்கள் மற்றும் அரசு அமைப்புகள் ஜூலை 10 ஞாயிற்றுக்கிழமை முதல் ஜூலை 14 வியாழன் வரை மூடப்படுவதாகவும், ஜூலை 19, ஞாயிற்றுக்கிழமை முதல் வழக்கமான வேலை நாட்கள் மீண்டும் தொடங்குவதாகும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈத் அல் அதா இஸ்லாமிய மாதமான ஜூல் ஹஜ்ஜில் 10 ஆம் தேதி குறிக்கப்படுகிறது. ஹிஜ்ரி வானியல் கணக்கீடுகளின் அடிப்படையில் சாத்தியமான தேதிகளை கணிக்க முடியும்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் ஹஜ் பெருநாள் எப்போது?

அமீரக வானியல் இயக்குநர்கள் குழுவின் தலைவர் இப்ராஹிம் அல் ஜார்வான் கூறுகையில், “ஜூலை 9 சனிக்கிழமை, ஈத் அல் அதாவின் முதல் நாளாக இருக்கலாம். அரஃபா தினம், ஈத் அல் அதாவுக்கு முந்தைய நாளில் குறிக்கப்படுகிறது. எனவே, குடியிருப்பாளர்கள் ஜூலை 8, வெள்ளிக்கிழமை முதல் ஜூலை 11 திங்கள் வரை 4 நாட்கள் விடுமுறையை அனுபவிக்க வாய்ப்புள்ளது”  என்றார்.

Related Articles

Back to top button
error: Content is protected !!