அமீரக செய்திகள்

நீங்கள் துபாய் விமான நிலையத்தில் இருந்து பயணிக்க உள்ளீர்களா..? அப்போ ஸ்மார்ட் கேட்ஸை பயன்படுத்துவது எப்படி என தெரிந்துக்கொள்ளவும்… விபரம் உள்ளே..!

ஈத் விடுமுறை மற்றும் பள்ளி கோடை விடுமுறைகள் நெருங்கி வருவதால், விடுமுறைக்கான டிக்கெட்டுகளை நீங்கள் முன்பே பதிவு செய்திருக்கலாம். ஆனால், இந்த விடுமுறைக் காலக்கட்டத்தில் கூட்ட நெரிசலலைத் தவிர்க்க, துபாய் விமான நிலையத்தின் டெர்மினல் 3-இல் வைக்கப்பட்டுள்ள ஸ்மார்ட் கேட்ஸைப் பயன்படுத்தி கொள்ளலாம். இது சில நொடிகளில் பாஸ்போர்ட் கட்டுப்பாடுகளை சரிபார்த்து அனுமதிக்கிறது. இந்த ஸ்மார்ட் கேட்ஸை அனைத்து பயணிகளும் பயன்படுத்த முடியாது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஸ்மார்ட் கேட்ஸ் என்றால் என்ன?

ஸ்மார்ட் கேட்ஸ் என்பது பாஸ்போர்ட் கட்டுப்பாட்டு நடைமுறைகளை முடிக்க ஒரு புதிய தொழில்நுட்ப செயல்முறையாகும். துபாய் விமான நிலையத்தின் டெர்மினல் 3-இல் இந்த ஸ்மார்ட் கேட்ஸ் சேவை செய்யப்படுகிறது.

குடியுரிமை மற்றும் வெளிநாட்டினர் விவகாரங்களுக்கான பொது இயக்குநரகமான GDRFA-வின் இணையதளத்தின்படி, பயணிகள் தங்களது பயோமெட்ரிக் பாஸ்போர்ட் அல்லது எமிரேட்ஸ் ஐடியை ஸ்மார்ட் கேட்டில் ஸ்கேன் செய்து, பாஸ்போர்ட்டில் வெளியேறும் முத்திரை இல்லாமல் பயோமெட்ரிக் அங்கீகார அமைப்பின் மூலம் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த ஸ்மார்ட் கேட்ஸ் தொழில்நுட்பமானது, பாஸ்போர்ட் கட்டுப்பாட்டு நடைமுறைகளை மனிதர்களின் தலையீடு இன்றி அடையாளம் காணும் திறன் வாய்ந்தது.

ஸ்மார்ட் கேட்ஸை யார் பயன்படுத்தலாம்?

ஸ்மார்ட் கேட்ஸைப் பயன்படுத்துவதற்குத் பின்வரும் வகைகளில் ஏதேனும் ஒன்றை நீங்கள் வைத்திருக்க வேண்டும்.

  • அமீரகம் மற்றும் (GCC- சவுதி அரேபியா, கத்தார், பக்ரைன், குவைத் மற்றும் ஓமன் நாட்டினராக இருக்க வேண்டும்.
  • ஐக்கிய அரபு அமீரகத்தின் குடியிருப்பாளர்களாக (resident) இருக்க வேண்டும்.
  • அரைவல் விசாவிற்கு(arrival visa) தகுதியான நாடுகளின் குடிமக்களாக இருக்க வேண்டும்.

ஸ்மார்ட் கேட்ஸை பயன்படுத்துவது எப்படி?

  • முக கவசங்கள், கண்ணாடிகள் மற்றும் தொப்பிகள் போன்ற உங்கள் முகத்தை மறைக்கக்கூடிய அனைத்தையும் அகற்ற வேண்டும், தேவைப்பட்டால் உங்கள் போர்டிங் பாஸ் மற்றும் பாஸ்போர்ட் கையில் வைத்திருப்பது சிறந்தது.
  • எமிரேட்ஸ் ஐடி அல்லது பயோமெட்ரிக் பாஸ்போர்ட்டை ஸ்கேன் செய்யவும்.
  • உங்கள் பயோமெட்ரிக்ஸைச் சரிபார்க்க கேமராவின் மேல் உள்ள பச்சை லைட்டை நேரடியாகப் பார்க்கவும்.
  • உங்கள் பயோமெட்ரிக் அங்கீகரிக்கப்பட்டதும், ஸ்மார்ட் கேட்ஸ் திறக்கப்படும், இதன் உங்கள் பாஸ்போர்ட் கட்டுப்பாட்டு செயல்முறை முடிந்தது.

ஸ்மார்ட் கேட்களைப் பயன்படுத்த யாருக்கு அனுமதி இல்லை?

  • குழந்தைகளுடன் உள்ள குடும்பங்கள்.
  • 15 வயதுக்குட்பட்ட அல்லது 1.2 மீட்டருக்கும் குறைவான உயரமுள்ள பயணிகள்.

GDRFA இன் படி, ஆறு மாதங்களுக்கும் மேலாக அமீரகத்திற்கு வெளியே தங்கியிருக்கும் அமீரக குடியிருப்பாளர்கள் மற்றும் புதுப்பிக்கப்பட்ட பாஸ்போர்ட் கொண்ட பயணிகளுக்கு ஸ்மார்ட் கேட்ஸைப் பயன்படுத்த அனுமதி இல்லை.

GDRFA அழைப்பு மையத்தின்படி, அமீரக வாசிகள் தங்கள் பாஸ்போர்ட்டை புதுப்பித்து பழைய பாஸ்போர்ட்டுடன் ஒன்றாக இணைக்க வேண்டும். ஐக்கிய அரபு அமீரக குடியிருப்பு விசா பழைய பாஸ்போர்ட்டில் இருந்தால், ஸ்மார்ட் கேட்ஸைப் பயன்படுத்துவதற்கு குடியிருப்பு விசா புதுப்பிக்கப்பட்ட பாஸ்போர்ட்டுக்கு மாற்றப்பட வேண்டும். இருப்பினும் அமீரக குடியிருப்பாளர்கள் ஸ்மார்ட் கேட்ஸில் தங்களது எமிரேட்ஸ் ஐடியைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

Related Articles

Back to top button
error: Content is protected !!