அமீரக செய்திகள்

UAE: யோகாசனத்தில் புதிய கின்னஸ் சாதனை படைத்த துபாயில் பணிபுரியும் இந்திய ஆசிரியர்..!

துபாயில் உள்ள இந்திய யோகா ஆசிரியர் ஒருவர் யோகாசனத்தில் புதிய கின்னஸ் சாதனை படைத்துள்ளார். 21 வயதாகும் யாஷ் மன்சுக்பாய் மொராடியா என்பவர் தொடர்ந்து 29 நிமிடங்களாக விருச்சிகாசனா என்ற நிலையில் இருந்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

யாஷ் மன்சுக்பாயின் இந்த சாதனை வீடியோ கின்னஸ் உலக சாதனைகளின் அதிகாரபூர்வ சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 29 நிமிடங்கள் மற்றும் நான்கு வினாடிகளாக அவரின் சாதனை நேரம் கணக்கிடப்பட்டுள்ளது. ஜூன் 21 ஆம் தேதியான நேற்று முன்தினம் சர்வதேச யோகா தினம் கொண்டாட்டப்பட்டது.

இதனை முன்னிட்டு கின்னஸ் உலக சாதனைகள் பக்கத்தில் இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. மொராடியா இந்த ஆண்டு பிப்ரவரி 22 அன்று இந்த சாதனையை செய்ததாக கின்னஸ் அமைப்பு தெரிவித்துள்ளது. கின்னஸ் சாதனை படைக்கும் இந்த முயற்சிக்காக அவர் இரண்டு ஆண்டுகளாக தயாராகி வந்ததாகவும் கின்னஸ் அமைப்பு கூறியுள்ளது.

Related Articles

Back to top button
error: Content is protected !!