அமீரக செய்திகள்

துபாயில் புத்தக வடிவ நூலகம் பொதுமக்கள் பார்வைக்கு நாளை திறப்பு.. நுழைவு இலவசமா..?

துபாய் அல் ஜடாஃப் பகுதியில் புத்தக வடிவில் அமைக்கப்பட்டுள்ள முகமது பின் ரஷித் நூலகம் திறக்கப்பட்டுள்ளது. ஏழு மாடி கட்டிடத்தில் இந்த நூலகத்தில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான புத்தகங்கள் உட்பட ஆறு மில்லியன் ஆராய்ச்சி ஆய்வு அறிக்கைகள் அடங்கி உள்ளன.

இது குறித்து அமீரகத்தின் துணைத் தலைவரும், துபாய் ஆட்சியாளருமான ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம், 1 பில்லியன் டாலர் மதிப்பில் நிறுவப்பட்ட இந்த நூலகம் 16-ஆம் தேதியான நாளை பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்படும் என்றார்.

குர்ஆனை வைக்கவும், ஓதவும் பயன்படுத்தப்படும் மர பலகை எனும் ‘ரைஹால்’ வடிவத்தில் பகுதியில் நூலகம் கட்டப்பட்டுள்ளது. MENA பகுதியிலேயே முகமது பின் ரஷித் நூலகம் தான் மிகப்பெரிய நூலகம் என்ற பெயரும் பெற்றுள்ளது.

முகமது பின் ரஷித் MBRL நூலகத்தின் குழு உறுப்பினர் ஜமால் அல் ஷைஹியின் கூறுகையில், நூலகம் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும் என்றும் ஞாயிற்றுக்கிழமை மூடப்பட்டுடிருக்கும் என்றும் தெரிவித்தார். நூலகத்தின் நுழைவு கட்டணமின்றி இலவசமாகவும், பார்வையாளர்கள் MBRL ஆப்-ஐ பதிவிறக்கம் செய்து ஸ்லாட்டுக்கு பதிவு செய்ய வேண்டும் என்று மேலும் அவர் கூறினார்.

Related Articles

Back to top button
error: Content is protected !!