அமீரக செய்திகள்

கடும் வெயிலுக்கு மத்தியில் அமீரகத்தில் பெய்த கனமழை..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த சில நாட்களாகவே கோடை காலத்தை முன்னிட்டு அதிகளவு வெப்பமானது நிலவி வருகிறது.  தினசரி 40 டிகிரி செல்சியஸ் அளவுக்கும் அதிகமான வெப்பநிலை இருந்த போதிலும், செவ்வாய்க்கிழமை அன்று கோடை மழையானது அமீரகத்தின் சில பகுதிகளில் பெய்துள்ளதாக தேசிய வானிலை மையம் தெரிவித்துள்ளது. கடும் வெயிலுக்கு மத்தியில் பெய்த இந்த கோடை மழையினால் குடியிருப்பாளர்கள் பெரிதும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM) அல் அய்னின் ஜிமி, கஷாபா, அல் ஹிலி மற்றும் அல் ஃபூவாவில் மிதமானது முதல் லேசான மழை பெய்துள்ளதாக கூறியுள்ளது. அதே போல் அல் அய்னில் அதிவேகக் காற்றுடன் கூடிய கனமழை பெய்ததாக @Storm_centre தனது சமூக ஊடக பக்கத்தில் தெரிவித்துள்ளது.

தற்போது பெய்த மழையில் cloud seeding எனும் மழையை மேம்படுத்தும் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. NCM இன் அதிகாரி ஒருவர் முன்பு கூறுகையில், கிளவுட் சீடிங் நடவடிக்கைகள் நாட்டில் 10 முதல் 25 சதவீதம் மழையை அதிகரிக்கின்றன என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

 

Related Articles

Back to top button
error: Content is protected !!