அமீரக செய்திகள்

UAE: அரபு மொழி தெரியாமல் அரபியில் ஆவணம் பெறுவது எப்படி..? இதோ அதற்கான வழிகள்…

அமீரகத்தில் அரசு துறைக்கு விண்ணப்பிக்கவோ அல்லது நீதிமன்றங்களுக்கு அனுப்பும் படிவங்களோ அரபு மொழியில் இருக்க வேண்டும். ஆனால் உங்களுக்கு அரபி மொழி தெரியாவிட்டால் என்ன செய்வது..?

ஐக்கிய அரபு அமீரகத்தின் நீதிமன்ற அமைப்பு அரபு மொழியில் மட்டுமே ஆவணங்களை ஏற்றுக்கொள்கிறது, மேலும் சில சமயங்களில் உங்களது பட்டம் அல்லது திருமணச் சான்றிதழின் அரபு மொழிப்பெயர்ப்புகளை சமர்ப்பிக்குமாறு அரசுத் துறையும் கோரலாம்.

எனவே, இதுபோன்ற சூழ்நிலையில் அமீரகத்தில் உள்ள தொழில்முறை அரபு மொழிபெயர்ப்பு சேவை மையங்களில் நீங்கள் மொழி பெயர்ப்பு செய்துக் கொள்ளலாம். அதற்கு முதலில், மொழிப்பெயர்ப்பு செய்பவர் அரசு சான்றளிக்கப்பட்டவராக இருக்க வேண்டும்.

சான்றளிக்கப்பட்ட மொழிபெயர்ப்பாளரை கண்டறிவது எப்படி?

ஐக்கிய அரபு அமீரகத்தில் பதிவுசெய்யப்பட்ட மொழிபெயர்ப்பு சேவைகளிலிருந்து நீங்கள் எளிதாக அரபு மொழிபெயர்ப்பு சேவைகளைப் பெறலாம். அரபு மொழிபெயர்ப்பு சேவைக் குறித்து PRO Desk Document Clearing Services LLC இன் வணிக மேம்பாட்டு மேலாளர் அப்துல் ஹுசைன் கூறுகையில், நீதிமன்ற வழக்குகளுக்கு மொழிபெயர்ப்பு சேவைகள் தேவைப்படுவதால், நீதிமன்ற நிறுவனங்களைச் சுற்றி மொழிபெயர்ப்பு சேவை மையங்கள் உள்ளன.

“சட்ட நிறுவனங்கள், தனியார் மொழிபெயர்ப்பு சேவைகள் அல்லது அமீரகத்தில் உள்ள தட்டச்சு மையங்களில் உங்கள் ஆவணங்களை அதிகாரப்பூர்வமாக அரபு மொழியில் மொழிபெயர்த்துக் கொள்ளலாம். ஆனால் ஆவணத்தை மொழிபெயர்த்த நிறுவனம் அல்லது நிறுவனத்தின் முத்திரை இருக்க வேண்டும். அமீரகத்தில் நீதிமன்றங்கள் அரபு மொழியில் நடத்தப்படுவதால், நீதிமன்றங்களுக்கு அருகிலேயே மொழிபெயர்ப்புச் சேவைகள் அமைந்துள்ளன” என்றார்.

சமீபத்தில் அபுதாபி நீதிமன்றத்தில் முஸ்லீம் அல்லாதோர்கள், இருமொழிகளில் விண்ணப்பங்களை அளிக்கலாம். அதாவது ஆங்கிலம் மற்றும் அரபு மொழிகளில் நீதிமன்றம் விசாரணைகள் நடத்துகிறது. மேலும் சிவில் திருமண விண்ணப்ப படிவத்தையும், விவாகரத்து படிவத்தையும் ஆங்கிலத்தில் நீதிமன்றம் ஏற்றுக்கொள்கிறது.

அரபு மொழி பெயர்ப்புக்கான கட்டணம் என்ன?

பொதுவாக, பல மொழி பெயர்ப்பு சேவை மையங்களில் ஒரு பக்கத்திற்கு 60 முதல் 80 திர்ஹம்ஸ் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

Related Articles

Back to top button
error: Content is protected !!