அமீரக செய்திகள்

UAE: துபாயில் பணிபுரிந்துகொண்டு உங்களது பெற்றோருக்கு RESIDENCY VISA எடுப்பது எப்படி? – வழிமுறைகள் உள்ளே..!

ஐக்கிய அரபு அமீரகத்தில் குறைந்தபட்சம் 25,000 திர்ஹம்ஸ் அல்லது மாதம் 19,000 திர்ஹம்ஸுக்கும் கூடுதலாக சம்பளம் வாங்கும் வெளிநாட்டு ஊழியர்கள் தங்களின் பெற்றோர்களுக்கு ஒரு வருடம் புதுப்பிக்கத்தக்க குடியுரிமை விசாக்களை பெற்றுக்கொள்ளலாம்.

தாய், தந்தை இருவருக்கும் UAE விசா பெறுவது எப்படி?

உங்கள் நாட்டில் பெற்றோரை பார்த்துக்கொள்ள யாரும் இல்லை என்றும் உங்களது பெற்றோருக்கு நீங்கள் ஒருவர் தான் என்பதற்கான ஆவணங்களை சமர்ப்பித்து விசா பெற்றுக் கொள்ளலாம்.

ஒருவேலை பெற்றோர்கள் விவாகரத்து பெற்று இருந்தால் அல்லது ஒருவர் இறந்து இருக்கும் போது அதற்கான ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும். பின்னர் குடியுரிமை மற்றும் ரெசிடென்சி துபாய் துறையான (DNRD) பார்வையிடுவது அவசியமாகும். உங்களது பெற்றோரை நுழைவு விசா பெற்று அமீரக அழைத்து வந்த 60 நாட்களுக்குள் நிரந்த குடியேற்ற விசாவை பெற முடியும்.

தேவையான ஆவணங்கள்:

  • டைபிங் மையங்களில் டைப் செய்யப்பட்ட விண்ணப்ப படிவம்
  • பெற்றோர்கள் மற்றும் உங்களது பாஸ்போர்ட் அளவு புகைப்படம்.
  • பெற்றோர்களின் ஒரு புகைப்படம்
  • உங்களுடைய தூதரகம் அல்லது துணைத் தூதரகத்திலிருந்து உறவை உறுதிப்படுத்தும் சான்றிதழ்.
  • உங்களுடைய பெற்றோருக்கு ஒரே பாதுகாவலர் நீங்கள் மட்டும் தான் என்பதற்கான ஆவணங்கள்.
  • நீங்கள் பணி புரியும் நிறுவனத்தில் இருந்து வேலை ஒப்பந்த நகல் அல்லது சம்பள சான்றிதலை சமர்ப்பிக்க வேண்டும்
  • மேலே குறிப்பிடப்பட்ட தேவையான ஆவணங்களை எடுத்துக்கொண்டு துபாயில் குடியுரிமை மற்றும் வெளிநாட்டினர் விவகார பொது இயக்குநரக அலுவலகத்திற்கு செல்ல வேண்டும்.

அங்கு அவர்கள் கூறும் வழிமுறைகளுக்கு இணங்க படிவத்தை பூர்த்தி செய்து, கட்டணம் செலுத்த வேண்டும். இதனையடுத்து 48 மணிநேரத்திற்குள் Empost மூலம் அனுமதி சான்றிதழ் அனுப்பப்படும். இல்லையெனில் நீங்கள் அவசர விசாவிற்கு விண்ணப்பித்திருந்தால், சில நிமிடங்களில் கவுண்டரில் இருந்து அனுமதி சான்றிதழ் பெற முடியும்.

கட்டணம்:

விண்ணப்பம் மற்றும் டைப்பிங் கட்டணமாக 110 திர்ஹம்ஸ் செலுத்த வேண்டும். ஒருவேலை விரைவாக விசா வேண்டும் என்றால் கூடுதாலாக 100 திர்ஹம்ஸ் கட்டணம் செலுத்த வேண்டும்.

நிரந்தர விசா பெறுதல்:

நுழைவு விசா பெற்ற 60 நாட்களில் நிரந்தர விசா பெறுவதற்கு விண்ணப்பிக்க வேண்டும். அதனை எவ்வாறு விண்ணப்பிப்பது எண்று காண்போம்:

தேவையான ஆவணங்கள்:

  • பெற்றோர்களின் விண்ணப்பதுடன் கூடிய மூன்று பாஸ்போர்ட் புகைப்படம்
  • பெற்றோர் மற்றும் உங்களுடைய அசல் பாஸ்போர்ட்
  • அசல் நுழைவு அனுமதி ஆவணம்
  • பெற்றோரின் சுகாதார அட்டை
  • திரும்பப்பெறும் தொகையின் வைப்பு ரசீது
  • அசல் வேலை அனுமதி அல்லது சம்பள சான்றிதல்

வழிமுறைகள்:

  • மருத்துவ சோதனை செய்து மருத்துவ கார்டு பெற்றுக்கொள்ள வேண்டும்
  • அனைத்து ஆவணங்களையும் எடுத்துக்கொண்டு துபாய் ரெசிடென்சி விவகார பொது இயக்குநரகம் சென்று டைப் செய்ய செலுத்த வேண்டிய கட்டணத்தை அளிக்க வேண்டும்
  • நிரந்தர விசா பிரிவுக்கு சென்று அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.
  • 600 திர்ஹம்ஸ் மதிப்புள்ள இன்சூரன்ஸ் பாலிசி ஒன்றை பெற்றோர்கள் பெயரில் எடுக்க வேண்டும்.

கட்டணம்:

ஒவ்வொறு வருடமும் டைப்பிங் கட்டணத்தை தவிர்த்து 110 திர்ஹம்ஸ் கட்டணம் செலுத்த வேண்டும். வேகமாக விண்ணப்பம் வேண்டுமானால், கூடுதலாக 100 திர்ஹம்ஸ் செலுத்த வேண்டும். Empost கட்டணமாக 10 திர்ஹம்ஸ் செலுத்த வேண்டும்.

Related Articles

Back to top button
error: Content is protected !!