இந்திய செய்திகள்

அமீரகம் போன்று இ-பாஸ்போர்ட்டை அறிமுகப்படுத்தும் இந்தியா..!

சர்வதேச பயணத்தை எளிதாக்கவும், அடையாள திருட்டுக்கு எதிரான பாதுகாப்பை வழங்கவும் இ-பாஸ்போர்ட்டுகளை வெளியிட இந்திய அரசு செயல்பட்டு வருகிறது என்று வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் வெள்ளிக்கிழமை தெரிவித்தார். ஜூன் 24 அன்று கொண்டாடப்பட்ட பாஸ்போர்ட் சேவை விழாவில் பேசிய ஜெய்சங்கர், அமைச்சகத்தின் பாஸ்போர்ட் சேவை திட்டம் டிஜிட்டல் மையத்தை உறுதி செய்வதற்கு குடிமக்களுக்கு பாஸ்போர்ட் சேவைகள் வழங்கப்பட்டு வருவதாக கூறினார்.

பாஸ்போர்ட் சேவை அமைப்பு டிஜிலாக்கர் அமைப்புடன் ஒருங்கிணைக்கப்பட்டு காகிதமில்லா ஆவணப்படுத்தல் செயல்முறையை எளிதாக்குகிறது என்றும் அமைச்சர் கூறினார். “அஞ்சல் துறையுடன் இணைந்து, அமைச்சகம் 428 தபால் அலுவலக பாஸ்போர்ட் சேவைகள் குடிமக்களின் வீட்டு வாசலில் சென்றடைந்து விவரம் பெறப்பட்டது. மேலும் வெளிநாடுகளில் உள்ள 178 தூதரகங்கள் மற்றும் துணைத் தூதரகங்களில் பாஸ்போர்ட் வழங்கும் முறைகளை அமைச்சகம் வெற்றிகரமாக ஒருங்கிணைத்துள்ளது” என்று அவர் கூறினார்.

“பாஸ்போர்ட் சேவை 2022-இன் நிகழ்வானது, இந்தியாவிலும் வெளிநாட்டிலும் உள்ள பாஸ்போர்ட் வழங்கும் அதிகாரிகளுடன் இணைந்துள்ளது” என்று அவர் கூறினார். தொற்றுநோய் குறைவுக்கு பின், சராசரியாக 900,000 பாஸ்போர்ட்டுகள் மற்றும் 450,000 கூடுதல் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன. இவ்வாறு ஜெய்சங்கர் தெரிவித்தார்.

Related Articles

Back to top button
error: Content is protected !!