அமீரக செய்திகள்

தென் ஆப்பிரிக்காவில் இருந்து தப்பிய இந்திய சகோதரர்கள் துபாயில் கைது.. பின்னணி என்ன?

தென் ஆப்பிரிக்க நாட்டின் முன்னாள் அதிபர் ஜேக்கப் ஜூமாவை ஊழல் குற்றச்சாட்டில் சிக்கவைத்துவிட்டு, பணமோசடி செய்த இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்களான ராஜேஷ் குப்தா, அடுல் குப்தா இருவரையும் துபாய் போலீஸார் கைது செய்துள்ளனர்.

குப்தா சகோதரர்களின் கடைசி சகோதரர் அஜய் குப்தா எங்கிருக்கிறார் என்பது தெரியாததால் அவர் கைது செய்யப்படவில்லை.

தென் ஆப்பிரிக்க முன்னாள் அதிபர் ஜேக்கப் ஜூமாவுடன் நட்புறவோடு பழகிய குப்தா குடும்பத்தினர் அரசு அதிகாரத்தில் புகுந்து தங்களுக்கு வேண்டியவர்களை நியமித்தது, நிதி மோசடியில் ஈடுபட்டதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளன. இருப்பினும் இந்தக் குற்றச்சாட்டுகளை குப்தா குடும்பத்தினர் மறுக்கிறார்கள்.

தென் ஆப்பிரிக்காவில் செயல்பட்டுவந்த பாராஸ்டாட்டல் நிறுவனங்களில் இருந்து கோடிக்கணக்கான டாலர்களை எடுத்துக்கொண்டு குப்தா சகோதரர்கள் கடந்த 2018ஆம் ஆண்டு துபாய்க்கு தப்பி வந்தனர்.

உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த அஜய் குப்தா, அதுல் குப்தா, ராஜேஸ் குப்தா ஆகிய 3 சகோதரர்கள் கடந்த 1990களில் தென் ஆப்பிரிக்காவுக்கு சென்று செருப்பு வியாபாரத்தை நடத்தினர். அதன்பின் சஹாரா கம்ப்யூட்டர்ஸ் என்ற நிறுவனத்தை மூவரும் தொடங்கினர்.

இந்த சூழலில் தென் ஆப்பிரிக்காவின் வறுமை, ஊழல், லஞ்சம் ஆகியவற்றை பயன்படுத்திக்கொண்டு, 2009ஆம் ஆண்டு முதல் 2018ஆம் ஆண்டுவரை அதிபராக இருந்த தென் ஆப்பிரி்க்க காங்கிரஸ் கட்சியின் தலைவர் முன்னாள் அதிபர் ஜேக்கப் ஜூமாவுடன் குப்தா சகோதரர்கள் நெருக்கத்தை ஏற்படுத்தினர்.

அதன்பின் அரசு அதிகாரங்களில் தலையிடுவது, பதவிகளை நிரப்புவதற்கு லஞ்சம் பெறுவது உள்ளிட்ட சட்டவிரோதமான செயல்களில் குப்தா சகோதரர்கள் ஈடுபட்டனர்.

குப்தா சகோதரர்களின் பண மோசடிக்கு எதிராக கடந்த 2017ஆம் ஆண்டு முதல் போராட்டங்களும், எதிர்ப்புகளும் நடைபெற்றன. குப்தா சகோதரர்கள் செய்த ஊழலில் ஜேக்கப் ஜூமா, தென் ஆப்பிரிக்க தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்தார். தேர்தல் முடியும் முன்பே தென் ஆப்பிரிக்காவில் வைத்திருந்த சொத்துக்கள் அனைத்தையும் எடுத்துக்கொண்டு, குப்தா சகோதரர்கள் துபாய்க்கு தப்பி வந்தனர்.

குப்தா சகோதரர்கள் ஊழலுக்கு ஆதரவாகச் செயல்பட்டது, ஆயுதக் கொள்முதலில் ஊழல் நடந்தது உள்ளிட்ட வழக்கில் முன்னாள் அதிபர் ஜேக்கப் ஜூமா கைது செய்யப்பட்டார். அந்த வழக்கில் அவருக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனையும் வழங்கப்பட்டு சிறையில் உள்ளார்.

தற்ப்போது குப்தா சகோதரர்கள் துபாயில் இருப்பதை அறிந்து தென் ஆப்பிரிக்காவுக்கு அழைத்துவர அந்நாட்டு போலீஸார் முயன்றனர்.

இதுதொடர்பாக ஐ.நா.வில் தென் ஆப்பிரிக்க அரசு முறையிட்டது. அதன்பின் 2021ஆம் ஆண்டு இரு நாடுகளுக்கு இடையே கைதிகளை பரிமாறிக்கொள்ளும் ஒப்பந்தம் கையொப்பம் நடந்தவுடன் குப்தா சகோதரர்களை அழைத்து செல்ல தென் ஆப்பிரிக்க அரசு சார்பில் விண்ணப்பம் செய்யப்பட்டது.

இதன் அடிப்படையில் துபாய் போலீஸார், குப்தா சகோதர்களில், ராஜேஷ் குப்தா, அடுல் குப்தா ஆகிய இருவரையும் கைது செய்துள்ளனர்.

Related Articles

Back to top button
error: Content is protected !!