அமீரக செய்திகள்

துபாய் விமான நிலையத்தில் 45 நாட்களுக்கு பிறகு முடிவுக்கு வந்த பராமரிப்பு பணிகள்.. நாளை முதல் மீண்டும் திறப்பு..!

உலகின் பரபரப்பான சர்வதேச விமான நிலையமான “துபாய் இன்டர்நேஷனல் ஏர்போர்ட் DXB”யில் வடக்கு ஓடுபாதையில் பராமரிப்பு பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், ஜூன் 22ஆன நாளை முதல் திறக்கப்பட உள்ளது. பாதுகாப்பு மற்றும் திறமையான செயல்பாடுகளை உறுதி செய்வதற்காகவும் விமான நிலையத்தை மேம்படுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியாகவும் மே 9 முதல் ஜூன் 21 வரை பராமரிப்பு பணி நடைபெற்றது.

துபாய் விமானப் போக்குவரத்து ஆணையத்தின் தலைவரும், எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் தலைவர் மற்றும் தலைமை நிர்வாகியுமான ஷேக் அகமது பின் சயீத் அல் மக்தூம், துபாய் சர்வதேச விமான நிலையத்தில் வடக்கு ஓடுபாதையில் பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்தார். பின்னர் இது குறித்து தெரிவித்த அவர், இத்திட்டத்தின் செயலாக்க நிலைகள் முடிவடைந்துள்ளதாகவும், திட்டமிட்டபடி ஜூன் 22ஆம் தேதி ஓடுபாதை மீண்டும் திறக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

பராமரிப்பு பணி தொடங்கிய மே 9ஆம் தேதியிலிருந்து, 1,000-க்கும் மேற்பட்ட வாகனங்கள், 400 க்கும் மேற்பட்ட பொறியாளர்கள் மற்றும் 3,800 தொழிலாளார்கள் துபாய் சர்வதேச விமான நிலையத்தில் வேலை செய்து, விரைவாக திட்டத்தை முடிக்க செயல்பட்டனர்.

DXB விமான நிலையத்தில் பரமரிப்பு பணிகளின்போது, விமானங்களின் தாமதங்கள் மற்றும் இடையூறுகளை குறைக்க, விமானங்களை துபாயின் இரண்டாவது விமான நிலையமான அல் மக்தூம் விமான நிலையத்திற்கும், துபாய் வேர்ல்ட் சென்ட்ரல் (DWC) விமான நிலையத்திற்கும் மாற்றப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!