அமீரக செய்திகள்

அமீரகத்தில் இன்று பதிவான நிலநடுக்கம்..!! தேசிய வானிலை மையம் தகவல்.!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் ஜூன் 18 ஆம் தேதி சனிக்கிழமையன்று 2.4 என்ற ரிக்டர் அளவில் சிறிய நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளதாக தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM) தெரிவித்துள்ளது. இந்த மையத்தின் படி, நிலநடுக்கம் மதியம் 3.27 மணியளவில் Albataeh பகுதியில் பதிவாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இருப்பினும் இவை எந்தவொரு பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுவாகவே ஐக்கிய அரபு அமீரகமானது ஒரு வருடத்தில் பல முறை சிறிய நிலநடுக்கங்களை அனுபவிக்கிறது. இருந்தபோதிலும் அவை பெரிதளவில் சேதத்தை ஏற்படுத்தாது என முன்பே நிபுணர்கள் தெரிவித்திருந்தனர்.

இது பற்றி ஏற்கெனவே கூறியிருந்த நிலநடுக்கவியல் நிபுணர், ஐக்கிய அரபு அமீரக குடியிருப்பாளர்கள் இந்த சிறியளவிலான நிலநடுக்கங்கள் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை, ஏனெனில் இதுபோன்ற சிறிய அளவிலான நடுக்கம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது என கூறியிருந்தார்.

“கடந்த 10 ஆண்டுகளாக திப்பா, மசாஃபி, கோர் ஃபக்கான் நகரம், ஃபுஜைரா நகருக்கு எதிரே உள்ள ஓமன் கடல் மற்றும் கல்பா ஆகிய இடங்களில் நிலநடுக்கங்கள் நிகழ்ந்து வருகின்றன. இந்தப் பகுதிகளில் உள்ள நிலத்தட்டுகளின் இயக்கமே இதற்குக் காரணம்” என்று NCM-ன் நில அதிர்வு இயக்குநர் காமிஸ் எல்ஷாம்சி தெரிவித்திருக்கிறார். மேலும் “வழக்கமாக ஐக்கிய அரபு அமீ்ரகத்தை தாக்கும் நிலநடுக்கம் ஒப்பீட்டளவில் சிறியது மற்றும் 2 முதல் 5 வரையிலான அளவு நிலநடுக்கம் பெரிய விளைவை ஏற்படுத்தாது. இங்குள்ள மக்கள் கவலைப்பட வேண்டியதில்லை” எனவும் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!