அமீரக செய்திகள்

“அமீரகத்தில் தொடங்கியது கோடைகாலம் .. இன்றைய தினம் ஆண்டின் மிக நீண்ட நாளாக இருக்கும்” -NCM தகவல்..!

அமீரகத்தில் கோடைகாலம் துவங்கவுள்ள நிலையில் ஜூன் 21 ஆம் தேதியான இன்று இந்த ஆண்டின் மிக நீண்ட நாளாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இரண்டு முறை, பூமி சூரியனுக்கு மிக நெருக்கமாக சென்று வருகிறது. இதனால் குறிப்பிட்ட ஒருசில நாட்கள் நீண்ட நாளாக அமைவது வழக்கம். அதே நேரத்தில் சூரியனிடமிருந்து பூமி விலகிச் செல்லும்போது மிக நீண்ட இரவாகவும் அமையும். அதன்படி அமீரகத்தில் ஜூன் 21 ஆம் தேதி இந்த ஆண்டின் மிக நீண்ட நாளாக அமையும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

தேசிய வானிலை ஆய்வு மையத்தின் கூற்றுப்படி: “சூரியனின் கதிர்கள் நேரடியாக வெப்ப மண்டலத்தின் மீது 23.37 டிகிரி வடக்கு திசையில் இருக்கும்போது ஆண்டின் மிக நீண்ட நாளாக நீடிக்கிறது. இதனால் வெப்பம் அதிகரிக்கும் என்பதை உறுதியாக கூறமுடியாது”.

இது குறித்து தேசிய வானிலை ஆய்வு மைய அதிகாரியான டாக்டர் அஹ்மத் ஹபீப் கூறுகையில்: “ஜூன் 21 ஆண்டின் மிக நீண்ட நாளும் கோடைகாலமும் ஆகும், இருப்பினும் அமீரகத்தில் வெப்பநிலை ஏற்கனவே அதிகமாக உள்ளது. ஜூன் மாதத்தில் இச்சமயத்தில் வெப்பநிலை 47-49 ° C ஆகவும், சில நாட்களில் 50°C ஆகவும் இருக்கும். ஆனால், மே மாதத்துடன் ஒப்பிடும்போது ஜூன் மாதத்தில் நாடு முழுவதும் சராசரி வெப்பநிலை சுமார் இரண்டு முதல் மூன்று டிகிரி செல்சியஸ் அதிகரித்துள்ளதாக தேசிய வானிலை ஆய்வு மையத்தின் தரவுகள் மூலம் அறியப்படுகிறது. நேற்று சில கடலோர பகுதிகளில் 100 சதவீதம் ஈரப்பதம் பதிவாகியுள்ளது.இது வழக்கத்திற்கு மாறானதல்ல, காற்றின் நிறை திசையை பொறுத்து ஈரப்பதத்தின் அளவு உள்ளது” என்றார்.

மேலும், இன்று இரவு 7:14 மணிக்கு சூரியன் மறையும் என்றும் இனி வரக்கூடிய வாரங்களில் நீண்ட நாட்களாக இருக்கும் என்றும் தேசிய வானிலை ஆய்வு மையமான NCM-ஐ தெரிவித்துள்ளது.

Related Articles

Back to top button
error: Content is protected !!