அமீரக செய்திகள்

துபாயில் பணிபுரியும் வெளிநாட்டினருக்கு புதிய சேமிப்பு திட்டம் அறிமுகம்.. ஜுலை 1 முதல் இணையலாம்..!

துபாயில் பணிபுரியும் அனைத்து வெளிநாட்டு ஊழியர்களும் தங்கள் முதலாளிகள் சேமிப்பு திட்டமான DEWS-இல் பதிவு செய்யப்பட வேண்டும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். துபாய் இன்டர்நேஷனல் ஃபைனான்சியல் சென்டர் ஊழியர் பணியிட சேமிப்பு (DEWS) திட்டத்திற்குப் பிறகு இப்புதிய திட்டம் உருவாக்கப்பட்டதாவும், இதற்கான பணியாளர்கள் சேர்க்கை ஜூலை 1 அன்று முதற்கட்டமாக நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மார்ச் 2022-இல் தொடங்கப்பட்ட இந்தத் திட்டம், முதல் கட்டமாக துபாயில் அரசு நிறுவனங்களில் உள்ள வெளிநாட்டு பணியாளர்களுக்கும், பின்னர் அடுத்தடுத்த கட்டங்களில் அதன் செயல்பாட்டை விரிவுபடுத்தும் நோக்கத்துடன் கொண்டுவரப்பட்டுள்ளது. இது பல்வேறு சேமிப்பு வாய்ப்புகளை வழங்கும் ஒரு ஒருங்கிணைந்த அமைப்பை வழங்குவதன் மூலம் ஊழியர்களின் திறமைகளை ஈர்க்கவும், தக்கவைத்துக் கொள்ளவும் நோக்கமாகக் கொண்டுள்ளது என்று Dubai International Financial Centre Employee (DIFC) ஆணையத்தின் தலைமை சட்ட அதிகாரி ஜாக் விஸர் தெரிவித்துள்ளார்.

மேலும் கூறிய ஜாக் விஸர், “DEWS-இல் செலுத்தப்படும் தொகைகள், தற்போதுள்ள சேவையின் இறுதிக் கொடுப்பனவு முறைக்கு மாற்றாக இருந்து, பணியாளரின் சம்பளத்தை பிடித்தம் செய்யாது. அமீரக குடிமக்கள் உட்பட அனைத்து ஊழியர்களும் விருப்பப்பட்டால் சம்பளப் பிடித்தல் மூலம் இத்திட்டத்தில் தன்னார்வ பங்களிப்புக்கு நிதி வழங்கலாம், ஆனால் அது கட்டாயமில்லை” என்று அவர் கூறினார்.

Related Articles

Back to top button
error: Content is protected !!