அமீரக செய்திகள்

அமீரகத்தில் உயரும் கொரோனா பாதிப்பு: Al Hosn கிரீன் பாஸ் வேலிடிட்டியை மீண்டும் குறைத்த அதிகாரிகள்..!! ஜூன் 15 முதல் அமல்..!!

அமீரகத்தில் தனிப்பட்ட நபரின் கொரோனா தடுப்பூசி நிலைமை மற்றும் PCR சோதனைக்கான நிலைமையை அறிய உதவும் AlHosn செயலியில் இனி கிரீன் பாஸின் செல்லுபடியாகும் காலம் 30 நாட்களில் இருந்து 14 ஆக குறைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர். அமீரகத்தில் சமீப காலமாக உயர்ந்து வரும் கொரோனா பரவல் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய நடைமுறையின் கீழ் கொரோனாவிற்கான முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட குடியிருப்பாளர்கள், கொரோனாவிற்கான எதிர்மறை PCR சோதனை முடிவைப் பெற்ற பிறகு, இனி 14-நாட்கள் மட்டுமே கிரீன் பாஸ் பெறுவார்கள் என கூறப்பட்டுள்ளது.

இது குறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய அரசாங்க செய்தித் தொடர்பாளர், ஜூன் 15 புதன்கிழமை முதல் இந்த புதிய விதி பொருந்தும் என்று தெரிவித்துள்ளார். மேலும் இந்த புதுப்பிக்கப்பட்ட செல்லுபடியாகும் புதிய விதி ஜூன் 20 திங்கள் முதல் கல்வித் துறையைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் ஊழியர்களுக்கு பொருந்தும் எனவும் கூறப்பட்டுள்ளது. அபுதாபியில் உள்ள பெரும்பாலான பொது இடங்களுக்கு கிரீன் பாஸ் உள்ளவர்களுக்கு மட்டுமே உள்நுழைய அனுமதி வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!