அமீரக செய்திகள்

ஷார்ஜாவில் குற்றம் மற்றும் விபத்துக்களை கண்காணிக்க ட்ரோன்களை பயன்படுத்தும் காவல்துறை..!

விபத்துக்கள் மற்றும் பாதுகாப்பு குறித்தான விளக்கத்தை தவிர்க்கவும் நேரத்தை குறைக்கவும் ஷார்ஜாவில் பல்வேறு பகுதிகளில் ட்ரோன்கள் இயக்கப்படும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

ஷார்ஜா காவல்துறையின் தலைமைத் தளபதி மேஜர் ஜெனரல் சைஃப் அல் சிரி அல் ஷம்சி கூறுகையில், “பாதுகாப்பு மற்றும் காவல்துறைப் பணியின் அளவை உயர்த்த தலைமை நிர்வாகம் எடுத்த முயற்சிகள் பாராட்டுக்குறியது, தற்போது கொண்டுவரப்பட உள்ள டிரோன்கள் மிகவும் மேம்பட்ட கருவியாக அமையும்” என்றார்.

மேலும் இது தொடர்பாக, ஷார்ஜா காவல்துறையின் ஜெனரல் கமாண்டின் செயல்பாட்டுத் தலைவரான லெப்டினன்ட் கர்னல் முகமது ரஹ்மா அல் கஜலின் தெரிவிப்பதாவது: டிரோன்கள் மூலம் கண்காணிக்கப்பட்டால், பல்வேறு குற்றவியல் மற்றும் தகவல் தொடர்புகளுக்கு பதிலளிக்கும் நேரத்தைக் குறைக்க உதவும், மேலும் அவற்றின் பயன்பாட்டிற்கான வழிமுறையை மறுஆய்வு செய்ய உதவும். இந்த புதுமையான தொழில்நுட்ப டிரோன்கள், மற்ற துறையின் தலையீடுகள் இன்றி போலீஸ் மற்றும் பாதுகாப்பு பணிகளுக்கு செயல்படும்.

ட்ரோனில் தொழில்நுட்ப மாற்றங்களுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்ட பல்வேறு ஸ்மார்ட் சிஸ்டம்கள் பொருத்தப்பட்டுள்ளன என்று அல் கசல் தெரிவித்தார். தெர்மல் இமேஜிங் துறையில் பணிபுரியும் சமீபத்திய சர்வதேச தொழில்நுட்பங்களுடன் கூடிய கேமராக்கள் மற்றும் இரவு புகைப்படம் எடுப்பதற்கான பிரத்யேக கருவிகள் இந்த டிரோனில் அடங்கும் என்றும் இது 14 கிமீ தொலைவில் இருந்து இயங்கக்கூடிய திறன் வாய்ந்தவை என்றும் அவர் கூறினார்.

Related Articles

Back to top button
error: Content is protected !!