அமீரக செய்திகள்இந்திய செய்திகள்

ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வருகை தரும் பிரதமர் நரேந்திர மோடி..!

ஜி7 நாடுகள் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமா் நரேந்திர மோடி வரும் 26-ஆம் தேதி ஜொ்மனிக்கு பயணம் மேற்கொள்ள இருக்கிறாா். அங்கு இரண்டு நாட்கள் தங்கியிருந்து மாநாட்டு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பின் 28ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வரவிருக்கிறாா்.

இந்தியா – அமீரக நாடுகள் சர்வதேச அரங்கில் நல்லுறவை பேணி வருவதுடன் பல ஆண்டுகளாக வர்த்தக தொடர்பை வைத்து இருக்கின்றன. அமெரிக்காவுக்கு பிறகு அமீரகத்தின் 2 வது மிகப்பெரிய வர்த்தக பங்குதாரராக இந்தியா இருந்து வருகிறது. 34 லட்சம் இந்தியர்கள் அமீரகத்தில் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்த நிலையில் அமீரகத்திற்கு 28ஆம் தேதி வருகைத்தரும் பிரதமா் மோடி, புதிய அதிபரான மாண்புமிகு ஷேக் முகமது பின் சையத் அல் நஹ்யான் அவர்களுக்கு வாழ்த்து தெரிவிப்பதுடன், கடந்த மே மாதம் காலமான அதிபா் ஷேக் கலிஃபா பின் சையது அல் நஹ்யான் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்க இருக்கிறாா். அவரது மறைவின்போது இந்தியா சாா்பில் குடியரசு துணைத் தலைவா் வெங்கையா நாயுடு பங்கேற்று இறுதி மரியாதை செலுத்தினாா் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!