அமீரக செய்திகள்

துபாய் விமான முகவர்கள் மற்றும் விமான அலுவலகங்களுக்கு விதிக்கப்பட்ட கட்டணங்களை ரத்து செய்ய இளவரசர் ஷேக் ஹம்தான் தீர்மானம்..!

விமான முகவர்கள் மற்றும் அலுவலகங்களுக்கு விதிக்கப்பட்ட கட்டணத்தை ரத்து செய்யும் தீர்மானத்தை துபாய் பட்டத்து இளவரசர் வெளியிட்டுள்ளார். துபாய் இளவரசர் ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷித் அல் மக்தூம் வெளியிட்ட முடிவின்படி, துபாயில் செயல்படும் விமான முகவர்கள், அலுவலகங்கள் மற்றும் கிளைகளுக்கான கட்டணங்கள் ரத்து செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மார்ச் 12, 1985 அன்று வெளியிடப்பட்ட விதிமுறைகள் மற்றும் 1998 இன் தீர்மானம் எண் (4) ஆகியவற்றின் படி விதிக்கப்பட்ட விமான முகவர்கள், அவர்களின் கிளைகள் மற்றும் அமீரகத்தில் செயல்படும் விமான அலுவலகங்கள் ஆகியவற்றுக்கு விதிக்கப்பட்ட கட்டணங்களை இந்தத் தீர்மானம் ரத்து செய்கிறது.

1985 ஆம் ஆண்டு மார்ச் 12 ஆம் தேதி வெளியிடப்பட்ட விதிமுறைகள் மற்றும் விமான முகவர்கள் மீது விதிக்கப்படும் கட்டணங்கள் தொடர்பான 1998 ஆம் ஆண்டின் தீர்மானம் எண் (4) மற்றும் 2022 ஆம் ஆண்டின் தீர்மானம் எண் (32) இன் விதிகளுக்கு முரணானது என்பதால் தீர்மானத்தின் விதிகள் ரத்து செய்ப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இதற்கான புதிய தீர்மானம் அரசின் அதிகரப்பூர்வ இதழில் விரைவில் அறிவிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
error: Content is protected !!