வளைகுடா செய்திகள்

சவூதியில் இருந்து வெளியேறும் வெளிநாட்டவர்கள் விசா விதிகளை மீறினால் நுழைய தடை -சவுதி அரசு அறிவிப்பு!

சவூதி அரேபியாவில் இருந்து வெளியேறும் வெளிநாட்டினர்கள் விசாவில் குறிப்பிடப்பட்டுள்ள காலத்திற்குள் நாடு திரும்பாவிட்டால் 3 ஆண்டுகளுக்கு சவூதி அரேபியாவிற்குள் நுழைய தடை விதிக்கப்படும் என்று சவுதி அறிவித்துள்ளது.

பாஸ்போர்ட் பொது இயக்குநரகமான (ஜவாசாத்) அறிக்கையின்படி, சவூதி விசா வைத்துள்ள வெளிநாட்டினர்கள் சவூதியை விட்டு வெளியேறி விசாவில் குறிப்பிட்டுள்ள காலகட்டத்திற்குள் நாடு திரும்ப வேண்டும். இல்லையெனில் 3 ஆண்டுகளுக்கு சவூதிக்குள் நுழைய தடை விதிக்கப்படும் என்றும் காலாவதி தேதியிலிருந்து இரண்டு மாதங்களுக்குப் பிறகு தானாகவே நாட்டைவிட்டு வெளியேறிவிட்டதாக பதிவு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது,

வெளிநாட்டிலிருந்து வெளியேறிய பின் நாடு திரும்பாத வெளிநாட்டினர்கள் பதிவு செய்ய, முன்பு இருந்ததைப் போல பாஸ்போர்ட் துறை அலுவலகத்திற்கு செல்ல வேண்டிய அவசியமில்லை என்று ஜவாசத் சுட்டிக்காட்டியுள்ளது. நுழைவுத் தடை காலம் விசா காலாவதியாகும் தேதியிலிருந்து கணக்கிடப்படுவதோடு, ஹிஜ்ரி நாட்காட்டியின் அடிப்படையில் உள்ளது.

மேலும் விசாவில் குறிப்பிட்டுள்ள காலாவதி காலத்தைத் நீட்டிப்பு செய்துள்ள வெளிநாட்டினர்களுக்கு இந்த தடை பெருந்தாது என்றும் ஸ்பான்சர் விசாவில் உள்ள வெளிநாட்டினர்களுக்கு இந்த தடை பொருந்தும் என்றும் ஜவாசத் கூறியுள்ளது.

Related Articles

Back to top button
error: Content is protected !!