அமீரக செய்திகள்

அமீரகத்தில் கடந்த ஒரு நாளில் 1,084 பேருக்கு கொரோனா பாதிப்பு..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த நான்கு மாதங்களில் இல்லாத அளவிற்கு ஒரே நாளில் 1,000 க்கும் மேற்பட்ட கொரோனா பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டதாக சுகாதார அமைச்சகம் நேற்று தெரிவித்திருந்த நிலையில் இன்றும் கொரோனா பாதிப்பானது 1,000 க்கும் மேல் பதிவாகியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி அமீரகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை, ஜூன் 10, 2022) வெளியிட்டுள்ள அறிவிப்பில் கடந்த ஒரு நாளில் மட்டும் 1,084 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமீரகத்தின் சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் (MoHAP) சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அமீரகத்தில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கையானது 915,068 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் அமீரகத்தில் இன்று கொரோனாவிற்கு எவரும் உயிரிழக்கவில்லை. இதனால் அமீரகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கையில் மாற்றமில்லாமல் 2,305 ஆக இருக்கின்றது.

கடந்த ஒரு நாளில் மட்டும் 876 பேர் குணமடைந்துள்ளதாகவும், இதுவரையில் 897,324 கொரோனாவால் பாதிக்கப்பட்டு முழுவதுமாக குணமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
error: Content is protected !!