அமீரக செய்திகள்

அமீரகத்தில் கடந்த ஒரு நாளில் 1,249 பேருக்கு கொரோனா பாதிப்பு..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த ஒரு சில நாட்களாகவே தினசரி 1,000 க்கும் மேற்பட்ட கொரோனா பாதிப்புகள் பதிவாகி வரும் நிலையில் இன்று 1,100 பேருக்கு மேல் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதன்படி அமீரகத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை, ஜூன் 12, 2022) வெளியிட்டுள்ள அறிவிப்பில் கடந்த ஒரு நாளில் மட்டும் 1,249 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமீரகத்தின் சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் (MoHAP) சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அமீரகத்தில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கையானது 917,496 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் அமீரகத்தில் இன்று கொரோனாவிற்கு எவரும் உயிரிழக்கவில்லை. இதனால் அமீரகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கையில் மாற்றமில்லாமல் 2,305 ஆக இருக்கின்றது.

கடந்த ஒரு நாளில் மட்டும் 977 பேர் குணமடைந்துள்ளதாகவும், இதுவரையில் 899,282 கொரோனாவால் பாதிக்கப்பட்டு முழுவதுமாக குணமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
error: Content is protected !!