அமீரக செய்திகள்

அமீரகத்தில் இதுவரை இல்லாத அளவில் உயர்ந்த பெட்ரோல் விலை..!! ஜூன் மாத விலைப்பட்டியலை வெளியிட்ட எரிபொருள் விலை நிர்ணயிக்கும் குழு…!!

ஐக்கிய அரபு அமீரகத்தின் எரிபொருள் விலை நிர்ணயிக்கும் குழுவானது ஜூன் 2022 ஆம் மாதத்திற்கான பெட்ரோல் மற்றும் டீசல் விலையை அறிவித்துள்ளது. கடந்த மே மாதத்தில் குறைக்கப்பட்ட பெட்ரோல் விலையானது இந்த முறை சற்று உயர்ந்துள்ளது.

எரிபொருள் குழுவின் ஜூன் மாத விலைப்பட்டியலின் படி, ஜூன் 1 ஆம் தேதி முதல், Super 98 வகை பெட்ரோல் விலையானது ஒரு லிட்டருக்கு 4.15 திர்ஹம்சாக நிர்ணயிக்கப்பட்டுளளது. ஆனால் இந்த வகை பெட்ரோலின் விலை மே மாதத்தில் 3.66 திர்ஹம்சாக இருந்தது.

அடுத்ததாக ஸ்பெஷல் 95 வகையை சார்ந்த பெட்ரோல் விலையானது ஒரு லிட்டருக்கு 4.03 திர்ஹம்சாக நிர்ணயிக்கப்பட்டுளளது. இந்த வகை பெட்ரோலின் விலை மே மாதம் 3.55 திர்ஹம்சாக இருந்தது.

மூன்றாவது வகை பெட்ரோலான இ-பிளஸ் 91 பெட்ரோல் விலையானது தற்போது ஒரு லிட்டருக்கு 3.96 திர்ஹம்சாக நிர்ணயிக்கப்பட்டுளளது. இது 3.48 திர்ஹம்சாக மே மாதத்தில் இருந்தது.

அதே சமயம் மே மாதத்தில் ஒரு லிட்டருக்கு 4.08 திர்ஹம்சாக இருந்து வந்த டீசல் விலையானது ஜூன் மாத விலை பட்டியலில் 4.14 திர்ஹம்சாக உயர்த்தப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!