அமீரக செய்திகள்

இந்தியாவில் இருந்து அமீரகத்திற்கு ஏற்றுமதியாகும் கோதுமைக்கு தடை.. காரணம் என்ன..?

இந்தியாவில் இருந்து வரும் அனைத்து வகையான கோதுமை மற்றும் அதன் ஏற்றுமதிக்கு அமீரக பொருளாதார அமைச்சகம் நான்கு மாதங்களுக்கு தடை விதித்துள்ளது.

இரு நாட்டு வர்த்தகத்தில் பாதிக்கப்பட்டுள்ள சர்வதேச முன்னேற்றங்கள், அமீரகம் இந்தியா இடையேயான உறவுகளை வலுப்படுத்தவே இந்தியாவில் கோதுமை மாவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக பொருளாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையேயான பொருளாதார கூட்டு ஒப்பந்தம் (CEPA) அமலில் இருக்கும் இந்த நிலையில் அமீரக பொருளாதார அமைச்சகம் நான்கு மாதங்களுக்கு இந்தியாவின் கோதுமை மற்றும் கோதுமை மாவின் ஏற்றுமதியை தடை செய்துள்ளது.

அது மட்டுமின்றி மே 13ஆம் தேதிக்கு முன்னர் இந்தியாவில் இருந்து அமீரகத்திற்கு இறக்குமதி செய்யப்பட்ட கோதுமை மற்றும் கோதுமை மாவு வகைகளை ஏற்றுமதி மற்றும் மறு ஏற்றுமதி செய்யும் நிறுவனங்கள், அமீரகத்திற்கு வெளியே ஏற்றுமதி செய்து கொள்ளலாம் என்றும் அதற்கான அனுமதியை அமைச்சகத்திடம் இருந்து பெற வேண்டும் என்று அமைச்சகம் அறிவித்துள்ளது.

Related Articles

Back to top button
error: Content is protected !!