அமீரக செய்திகள்

UAE: வெறும் ஐந்தே மாதத்தில் 56 சதவீதம் உயர்ந்த பெட்ரோல் விலை..!! முதன்முறையாக 4 Dh ஐ தாண்டிய ஒரு லிட்டர் பெட்ரோல்..!!

உலகிலேயே எண்ணெய் வளமிக்க நாடுகளில் ஒன்றாக கருதப்படும் அமீரகத்தில் தற்போது பெட்ரோல் டீசல் விலையானது கடந்த சில மாதங்களாவே தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. உலகளாவிய கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு காரணமாகவும், குறிப்பாக பிப்ரவரியில் ரஷ்யா-உக்ரைன் போருக்குப் பிறகு பெட்ரோல் விலை உயர்ந்துள்ளதாகவும் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

2022 ம் ஆண்டின் ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில், தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் பெட்ரோல் விலை 56 சதவீதத்திற்கு மேல் உயர்ந்துள்ளது. அதாவது, ஜனவரி 2022 ல் Super 98 பெட்ரோல் ஒரு லிட்டருக்கு Dh2.65 க்கு விற்கப்பட்ட நிலையில், தற்போது அதே Super 98 பெட்ரோல் ஒரு லிட்டருக்கு Dh4.14 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் 2015 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில், ஐக்கிய அரபு அமீரகம் எரிபொருள் விலைக் கட்டுப்பாட்டை நீக்கியதில் இருந்து முதன்முறையாக அமீரகத்தில் பெட்ரோல் விலை நான்கு திர்ஹம்ஸை தாண்டியுள்ளது. உக்ரைன் போருக்குப் பிறகு ரஷ்யாவிலிருந்து எண்ணெய் இறக்குமதியைத் தடை செய்ய ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புக்கொண்டதை அடுத்து, இந்த வார தொடக்கத்தில் எண்ணெய் விலைகள் ஒரு பீப்பாய்க்கு 124 டாலருக்கு மேல் வர்த்தகம் செய்யப்பட்டதும் இதற்கு காரணம் என துறை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

எரிபொருள் குழுவின் ஜூன் மாத விலைப்பட்டியலின் படி, ஜூன் 1 ஆம் தேதி முதல், Super 98 வகை பெட்ரோல் விலையானது 13 சதவீதம் அதிகரித்து ஒரு லிட்டருக்கு 4.15 திர்ஹம்சாக நிர்ணயிக்கப்பட்டுளளது. ஆனால் இந்த வகை பெட்ரோலின் விலை மே மாதத்தில் 3.66 திர்ஹம்சாக இருந்தது.

அடுத்ததாக ஸ்பெஷல் 95 வகையை சார்ந்த பெட்ரோல் விலையானது 13.5 சதவீதம் உயர்த்தப்பட்டு ஒரு லிட்டருக்கு 4.03 திர்ஹம்சாக நிர்ணயிக்கப்பட்டுளளது. இந்த வகை பெட்ரோலின் விலை மே மாதம் 3.55 திர்ஹம்சாக இருந்தது.

மூன்றாவது வகை பெட்ரோலான இ-பிளஸ் 91 பெட்ரோல் விலையானது 13.8 சதவீதம் அதிகரித்து தற்போது ஒரு லிட்டருக்கு 3.96 திர்ஹம்சாக நிர்ணயிக்கப்பட்டுளளது. இது 3.48 திர்ஹம்சாக மே மாதத்தில் இருந்தது.

அதே சமயம் மே மாதத்தில் ஒரு லிட்டருக்கு 4.08 திர்ஹம்சாக இருந்து வந்த டீசல் விலையானது ஜூன் மாத விலை பட்டியலில் 4.14 திர்ஹம்சாக உயர்த்தப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

2022 ம் ஆண்டின் ஜனவரி முதல் ஜூன் வரையிலான பெட்ரோல் விலை உயர்வு பட்டியல்:

Related Articles

Back to top button
error: Content is protected !!