அமீரக செய்திகள்

அமீரகத்தில் இலவசமாக தங்க நாணயம் பெறலாம்.. விற்பனையாளர்கள் வழங்கும் அதிரடி ஆஃபர்..!

அமீரகத்தின் தங்க சில்லறை விற்பனையாளர்கள், வாடிக்கையாளர்களை கவர சலுகைகளை வழங்கி வருகின்றனர். கோடைகாலத்தில் தங்கள் சொந்த ஊருக்கு செல்வதற்கு முன், விற்பனையை அதிகரிக்க, வாடிக்கையாளர்களை கவரும் நோக்கில் விற்பனை சலுகைகளை அறிமுகப்படுத்திய உள்ளனர். இம்முறை நேரடியான தள்ளுபடிகளுக்குப் பதிலாக, தங்கம் அல்லது வைர நகைகளை வாங்குவதில் குறிப்பிட்ட அளவைத் தாண்டினால், இலவச தங்க நாணயங்களை வழங்கும் சலுகையை தங்க விற்பனையாளர்கள் அளித்துள்ளனர்.

தங்கம் கடந்த வெள்ளியன்று ஒரு அவுன்ஸ் 1,820 டாலர்கள் என்ற அளவில் இருந்தது. அமெரிக்கா மற்றும் பிற தங்கம் ஏற்றுமதியை தடை செய்வதைப் குறித்த செய்தியின் காரணமாக, தங்கம் விலை $1,838 ஆக உயர்ந்துள்ளது. அதன்படி துபாயில் 22K தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 207.75 திர்ஹம்ஸ் என்ற அளவில் இருந்தது, ஆனால் அடுத்த நாள் முதல் விலை நிர்ணயம் செய்யப்படும் போது அது அதிகரிக்கிறது என்று தங்கம் மற்றும் சில்லரஒ விற்பனை ஆய்வாளர் கூறுகிறார்.

“பிப்ரவரி பிற்பகுதியில் இருந்து, உக்ரைன் மோதல் தொடங்கியபோது, ​​தங்கம் ஒரு அவுன்ஸ் $2,000 வரை சென்றது, பின்னர் $1,800 அல்லது $1,900 என்ற அளவில் நிலைத்தது. பின்னர் அடுத்தடுத்த மாதங்களில் தங்கம் சுமார் $1,800 வரை குறையும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது, ஆனால் விலை குறையவில்லை. இந்த மாதம் அமெரிக்க பெடரல் ரிசர்வ் வட்டி விகிதங்களை 0.75 சதவீதம் உயர்த்திய பிறகும், தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்தது. கடந்த நான்கு மாதங்களில் அமீரகத்தில் வசிப்பவர்களிடையே தங்கம் வாங்கும் ஆர்வம் குறைவாகவே காணப்பட்டது, மேலும் சுற்றுலாப் பயணிகளும் தங்கம் வாங்க ஆர்வம் காட்டவில்லை” என்று நகை விற்பனையாளர் கூறினார்.

Related Articles

Back to top button
error: Content is protected !!