அமீரக செய்திகள்

அமீரகத்தில் பெய்து வரும் கனமழையில் சிக்கித் தவித்த 870 பேர் மீட்பு.. இரவு பகலாக உதவிவரும் மீட்புக் குழுவினர்..!

ஐக்கிய அரபு அமீரகத்தின் கிழக்குப் பகுதிகளில் பெய்த கனமழையால் ஷார்ஜா மற்றும் ஃபுஜைராவில் சிக்கித் தவித்த 870 பேரை அதிகாரிகள் மீட்டுள்ளனர். பலத்த மழையால் வீடுகள் வெள்ளத்தில் மூழ்கிய போதிலும், ஒருங்கிணைந்த மீட்புபக் குழுவினரின் துரித செயல்களால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் ஜெனரல் டாக்டர் அலி சலேம் அல் துனைஜி கூறுகையில், கனமழையால் இருப்பிடங்களை இழந்த 3,897 பேர் தற்காலிகமான மீட்புக் குழுவின் உதவியுடன் தங்க வைக்கப்பட்டுள்ளனர். போலீசார், மீட்பு மற்றும் ஆம்புலன்ஸ் குழுக்கள் மக்களின் உடைமைகளைப் பாதுகாக்கவும், போக்குவரத்து பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்யவும் 24 மணி நேரமும் களத்தில் சேவையாற்றி வருகின்றனர்.

தேசிய அவசரகால நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் (NCEMA) அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் தாஹிர் அல் அமரி, 55-க்கும் மேற்பட்ட பேருந்துகளில் மக்களை தங்கவைக்க ஹோட்டல்களுக்கு ஏற்றிச் செல்லப்பட்டது. மேலும் 100க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் சிக்கித் தவிக்கும் குடியிருப்பாளர்களை மீட்கவும் உதவினர்.

இது குறித்து ஜெனரல் டாக்டர் அலி சேலம், குடியிருப்பாளர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றவும், கவனமாக இருக்கவும், பாதுகாப்புத் தேவைகளைக் கடைப்பிடிக்கவும் அறிவுறுப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
error: Content is protected !!