அமீரக செய்திகள்

அமீரகத்தில் தனியார் துறை ஊழியர்களுக்கு ஈத் அல் அதா விடுமுறை அறிவிப்பு..!

அமீரகத்தில் உள்ள மத்திய அரசு துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கான அதிகாரப்பூர்வ ஈத் அல் அதா விடுமுறை 4 நாட்களாக அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது தனியார் துறை ஊழியர்களுக்கும் விடுமுறைஅறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அரசு மனிதவள மேம்பாட்டிற்கான பெடரல் ஆணையம் (FAHR) கூறுகையில், தனியார் துறைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஈத் அல் அதா விடுமுறை ஜூலை 8 வெள்ளிக்கிழமை முதல் ஜூலை 11 திங்கள் வரை 4 என நாட்கள் என்றும் ஜூலை12ஆம் தேதி செவ்வாய்கிழமை முதல் பணிகள் தொடங்கும் என்று தெரிவித்துள்ளது.

சவூதி அரேபியாவில் நேற்று முன்தினம் பிறை தென்பட்டதால் ஜூன் 30 ஆன நேற்று துல் ஹஜ் மாதத்தின் முதல் நாளாகவும், ஜூலை 9 ஆம் தேதி ஈத் அல் அத்ஹா கொண்டாட இருப்பதாகவும், ஜூலை 8 ஆம் தேதி அரஃபா தினம் என்றும் உறுதியாகியுள்ளது.

Related Articles

Back to top button
error: Content is protected !!