அமீரக செய்திகள்

அமீரக வாகன ஓட்டிகளுக்கு ஷாக் நியூஸ்.. ஜூலை மாதத்திற்கான பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்பு..!

ஐக்கிய அரபு அமீரகத்தில் பெட்ரோல், டீசல் விலை மீண்டும் அதிகரித்துள்ளதால் வாகன ஓட்டிகள் சிர்த்திற்குள்ளாகியுள்ளனர். ஜூலை மாதத்திற்கான பெட்ரோல் மற்றும் டீசல் விலையை அமீரக எரிபொருள் விலைக் குழு (The UAE fuel price committee) அறிவித்துள்ளது.

  • ஜூலை 1 முதல் சூப்பர் 98 பெட்ரோல் விலை லிட்டருக்கு 4.63 திர்ஹம்ஸ் அதிகரித்துள்ளது. ஜூன் மாதம் சூப்பர் 98 பெட்ரோல் லிட்டருக்கு 4.15 திர்ஹம்ஸாக இருந்தது.
  • ஸ்பெஷல் 95 பெட்ரோலின் விலை லிட்டருக்கு 4.52 திர்ஹம்ஸாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது ஜூனில் 4.03 திர்ஹம்ஸாக இருந்தது.
  • பிளஸ் 91 பெட்ரோல் விலை லிட்டருக்கு 4.44 திர்ஹம்ஸாக அதிகரித்துள்ளது. ஜூன் மாதம் பிளஸ் 91 பெட்ரோல் லிட்டருக்கு3.96 திர்ஹம்ஸாக இருந்தது.
  • டீசல் விலை லிட்டருக்கு 4.76 திர்ஹம்ஸாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது ஜூனில் 4.14 திர்ஹம்ஸாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!