அமீரக செய்திகள்

UAE: உயர்நிலைப் பள்ளி பொதுத்தேர்வில் 99.14 சதவீதம் பெற்ற மாணவிக்கு உதவிய அஜ்மான் ஆட்சியாளர்..!

உயர்நிலைப் பள்ளி பொதுத்தேர்வில் 99.14 சதவீத மதிப்பெண் பெற்ற சிறந்த மாணவி தீனா அகமது அப்பாஸ் ஃபயாஸின் கல்விக்கட்டணத்தை உச்ச கவுன்சில் உறுப்பினரும், அஜ்மான் ஆட்சியாளருமான ஷேக் ஹுமைத் பின் ரஷித் அல் நுஐமி ரத்து செய்துள்ளார். அஜ்மானின் பட்டத்து இளவரசர் ஷேக் அம்மார் பின் ஹுமைத் அல் நுஐமி முன்னிலையில் நீதிமன்றத்தில் ஃபயாஸ் மற்றும் அவரது குடும்பத்தினரை வரவேற்கும்போது ஷேக் ஹுமைத் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

சிறந்த திறமையாளர்களை கௌரவிப்பதற்கும், எதிர்கால சந்ததியினரை ஊக்குவிப்பதற்கும், லட்சியங்களை அடைவதற்கும், பொருத்தமான சூழலை உருவாக்குவதற்கும் ஐக்கிய அரபு அமீரகம் ஆதரவு அளித்து வருகிறது என்று ஷேக் ஹுமைத் கூறினார். ஃபயாஸின் தந்தை, அஜ்மான் ஆட்சியாளரின் உன்னதமான இந்த செயலுக்கும், மாணவர்களுக்கான அவரது தொடர்ச்சியான ஆதரவிற்கும் நன்றிகளை தெரிவித்தார்.

Related Articles

Back to top button
error: Content is protected !!