அமீரக செய்திகள்

அமீரகத்தில் வரலாறு காணாத கனமழை.. வெள்ளத்தில் மூழ்கிய கார்கள், மசூதிகள்..!

அமீரகத்தில் பெய்த கனமழை காரணமாக வீடுகள் மற்றும் வாகனங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. ஷார்ஜா, ஃபுஜைரா மற்றும் ராஸ் அல் கைமாவில் பெய்த கனமழை, நாட்டின் வரலாற்றில் மிக மோசமான வெள்ளம் என்று வானிலை துறை விவரித்துள்ளது. அமீரகத்தின் தேசிய வானிலை ஆய்வு மையத்தின் கூற்றுப்படி, கடந்த 27 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த கோடையில் மழை பெய்துள்ளதாக தெரிவித்துள்ளது.

நாட்டின் பல பார்க்கிங் பகுதிகளில் கார்கள் நீரில் மூழ்கியதால், பல வாகனங்கள் சிக்கிக்கொண்டுள்ளது. இதில் முற்றிலுமாக ஃபுஜைராவின் தெருக்கள் வெள்ளத்தில் மூழ்கின. வெள்ளம் மற்றும் மழையால் பல சொத்துக்கள் சேதம் அடைந்துள்ளது. இந்த மழையினால் வீடுகள் மற்றும் வாகனங்களுக்கு ஏற்படும் சேதங்களுக்கு அமீரகத்தில் உள்ள பெரும்பாலான காப்பீட்டுக் கொள்கைகளால் பேக்கேஜ்களைப் பொறுத்து பாதுகாக்கப்படும்.

இரண்டு நாட்கள் இடைவிடாத மழைக்குப் பிறகு, ஃபுஜைராவின் துறைமுக நிலையத்தில் 255.2 மிமீ நீர் பதிவாகியுள்ளது, இது ஜூலை மாதத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தின் மிக அதிகமானதாகும். நிலையற்ற வானிலைக்கான எச்சரிக்கைகள் அதிகாரிகளால் வெளியிடப்படும்போது, ​​அமீரக குடியிருப்பாளர்கள் பள்ளத்தாக்குகள் மற்றும் அணைகளிலிருந்து விலகி இருக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளனர்.

தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM) 70க்கும் மேற்பட்ட எச்சரிக்கைகளை விடுத்துள்ளது, இடைவிடாத மழை மற்றும் வெள்ளத்தால் சாலை சேதம் காரணமாக ஷார்ஜா, ஃபுஜைரா மற்றும் ராஸ் அல் கைமாவில் பல வழித்தடங்கள் மூடப்பட்டுள்ளன. வாகன ஓட்டிகள் வீட்டிலேயே இருக்குமாறும், அவசர சமயங்களில் மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
error: Content is protected !!