அமீரக செய்திகள்இந்திய செய்திகள்

UAE: ஷார்ஜாவில் இருந்து சென்னை, திருச்சிக்கு செல்லும் பயணிகளுக்கு செம்ம ஆஃபர்.. ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் அதிரடி அறிவிப்பு..!

அமீரகத்தின் ஷார்ஜாவில் இருந்து இந்தியாவின் பல நகரஙளுக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் விமான சேவையை வழங்கிவருகிறது. அந்த வகையில் தற்போது ஷார்ஜாவில் இருந்து திருச்சிக்கு வாரத்தில் ஏழு விமானங்கள் இயக்கப்படுவதாகவும், அதன்டிக்கெட் விலை 484 திர்ஹம்ஸில் இருந்து தொடங்குவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதுபோன்று ஷார்ஜாவில் இருந்துசென்னைக்கு வாரத்தில் 2 விமானங்களும், அதன் டிக்கெட் விலை 440 திர்ஹம்ஸில் இருந்து தொடங்குவதாகவும்அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கேரள மாநிலம் கோழிக்கோடுக்கு வாரத்தில் 7 விமானங்கள் இயக்கப்படும் என்றும், டிக்கெட் விலை 484 திர்ஹம்ஸில் இருந்துதொடங்குவதாகவும் ஏர் இந்திய எக்ஸ்பிரஸ் அறிவித்துள்ளது. ஷார்ஜாவில் இருந்து கொச்சினுக்கும் வாரத்தில் 7 விமானங்களும், டிக்கெட் விலை 484 திர்ஹம்ஸில் இருந்து தொடங்குவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஷார்ஜாவில் இருந்து திருவனந்தபுரத்திற்குவாரத்தில் 4 விமானங்களும், டிக்கெட் விலை 503 திர்ஹம்ஸில் இருந்து தொடங்குவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஷார்ஜாவில்இருந்து கன்னூருக்கு வாரத்தில் 7 விமானங்களும், டிக்கெட் விலை 390 திர்ஹம்ஸில் இருந்து தொடங்குவதாகவும்அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஷார்ஜாவில் இருந்து வாரணாசிக்கு வாரத்தில் 7 விமானங்களும், அதன் டிக்கெட் விலை 420 திர்ஹம்ஸில் இருந்துதொடங்குவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கூறியுள்ளது. ஷார்ஜாவில் இருந்து டெல்லிக்கு வாரத்தில் 7 விமானங்களும், அதன்டிக்கெட் விலை 345 திர்ஹம்ஸில் இருந்து தொடங்குவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஷார்ஜாவில் இருந்து மும்பைக்கு வாரத்தில் 6 விமானங்களும், டிக்கெட் விலை 395 திர்ஹம்ஸில் இருந்து தொடங்குவதாகவும் ஏர் இந்தியா எஸ்பிரஸ் விமான நிறுவனம்அறிவித்துள்ளது.

Related Articles

Back to top button
error: Content is protected !!