அமீரக செய்திகள்இந்திய செய்திகள்

UAE: துபாய் பாம் ஜுமைராவில் ரூ.640 கோடி மதிப்பில் பங்களா வாங்கிய முகேஷ் அம்பானி.. யாருக்காக தெரியுமா..?

துபாயில்  ஜூமைராவில் உலக பணக்காரர்களில் ஒருவரான ரிலையன்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் முகேஷ் அம்பானி, இங்கு சுமார் 80 மில்லியன் டாலர் மதிப்புமிக்க பங்களா ஒன்றை வாங்கியுள்ளார். இந்திய பணக்காரர்களில் 2ஆம் இடத்தை பிடித்திருக்கும் இவர், சமீப காலமாக வெளிநாடுகளில் சொத்து வாங்கி வருகிறார்.

அந்த வகையில் கடந்த ஆண்டு லண்டனில் பிரம்மாண்டமான ஒரு வீடு வாங்கினார். இந்த நிலையில், தற்போது துபாயில் ரூ.640 கோடி மதிப்பிலான ஒரு பிரம்மாண்ட வில்லாவையும் வாங்கியுள்ளார். இந்த பிரம்மாண்ட பங்களாவை தனது இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கு பரிசாக அளிப்பதற்காக வாங்கியுள்ளார்.

முக்கியமான வர்த்தக, சுற்றுலா நகரமான துபாயில் இதுவரை யாரும் வாங்கிடாத வகையில் ஒரு பிரபல தீவில் அதுவும் மிகப்பெரிய தொகைக்கு முகேஷ் அம்பானி வீடு வாங்கியுளள்ளார். பாம் ஜூமைராவில் உள்ள இந்த பங்களாவில் 10 படுக்கையறைகள், ஸ்பா, உள் மற்றும் வெளிப்பகுதியில் நீச்சல் குளம் உள்ளிட்ட பல சிறப்பம்சங்களை கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!