வளைகுடா செய்திகள்

துபாய் புர்ஜ் கலிஃபாவை விட மிகப்பெரிய கட்டிடம் கட்ட சவுதி அரேபியா திட்டம்..!

சவுதி அரேபிய அரசு 75 மைல் நீளத்துக்கு இருபுறங்களிலும் 1600 அடி உயரமுள்ள வானளாவிய கட்டிடங்களைக் கட்ட திட்டமிட்டுள்ளது. சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் அறிவுறுத்தலின்படி வான் உயர்ந்த கட்டடங்களை உருவாக்க வடிவமைப்பாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.

மிரர் லைன் எனப் பெயரிட்டுள்ள இந்தத் திட்டம் கட்டி முடிக்கப்பட்டால் உலகின் மிகப்பெரிய கட்டிடமாக இருக்கும். இந்தத் திட்டத்துக்கு ஒரு இலட்சம் கோடி டாலர் செலவாகும் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டடங்களின் அடியில் அதிவிரைவு ரயில் இயக்குவதும், நிலத்தில் இருந்து ஆயிரம் அடி உயரத்தில் ஒரு விளையாட்டரங்கம் கட்டுவதும் இந்தத் திட்டத்தில் அடங்கும் எனக் குறிப்பிட்டுள்ளது.

சவுதியில் இந்த மிகப்பெரிய கட்டிடம் கட்டப்பட்டால், தற்போது வரை உலகின் மிகப்பெரிய கட்டிடமாக திகழும் துபாய் புர்ஜ் கலிஃபாவின் சாதனை முறியடிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!