Uncategorized

UAE: இனி டிரைவிங் லைசென்ஸ் புதுப்பிக்க வேறெங்கும் அலைய வேண்டாம்..!! விரைவிலேயே வருகிறது DXB-யில் புதிய சேவை..!!

துபாயில் வசிப்பவர்கள் இனி தங்களது ஓட்டுநர் உரிமத்தை புதுப்பித்துக்கொள்ள வேறெங்கும் அலைய தேவையில்லை. விரைவில் வரவிருக்கும் நடைமுறையால் துபாய் சர்வதேச விமான நிலையத்திலேயே ஓட்டுநர் உரிமங்களை அமீரகவாசிகள் புதுப்பித்துக்கொள்ளலாம். இதற்கான அறிவிப்பை துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் வெளியிட்டுள்ளது.

இந்த அறிவிப்பில் துபாய் தனது சர்வதேச விமான நிலையத்தில் ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தல் சேவைகளை வழங்கும் திட்டத்தை தொடங்கவிருப்பதாக தெரிவித்துள்ளது. அதன்படி  சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) இந்த ஆண்டின் மூன்றாம் காலாண்டில் துபாய் சர்வதேச விமான நிலையம் – டெர்மினல் 1 (புறப்படும் பகுதி) இல் ஒரு புதிய சேவை நிலையத்தைத் திறக்கும் என்று தெரிவித்துள்ளது. இது “தனியார் துறை மற்றும் நம்பகமான முகவர்களுடன் இணைந்து” திறக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

RTA உரிமம் வழங்கும் முகமையின் ஓட்டுநர் உரிமம் வழங்கும் நிர்வாக இயக்குநர் அகமது மஹ்பூப் இது பற்றி கூறுகையில்: “ஓட்டுநர் உரிமத்தைப் புதுப்பிப்பதற்கு கண் பரிசோதனை முக்கியத் தேவையாகும். வாடிக்கையாளர் கண்பார்வை பரிசோதனைக்கு உட்படுத்த துபாயில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட ஆப்டிகல் மையங்களில் ஒன்றைப் பார்வையிட வேண்டும். அதில் தேர்ச்சி பெற்றதும், ஓட்டுநர் உரிமமானது கிடைக்கும் சேனல்கள் மூலம் வழங்கப்படும் அல்லது புதுப்பிக்கப்படும். சேனல் வகை மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட விருப்பத்தைப் பொறுத்து ஓட்டுநர் உரிமம் அச்சிடப்படும் அல்லது வாடிக்கையாளருக்கு வழங்கப்படும்” என கூறியுள்ளார்.

தொடர்ந்து கூறுகையில் “இந்த முயற்சியின் மூலம், வாடிக்கையாளர்களின் தேவைகளுக்குப் பதிலளிக்கும் அரசாங்க சேவைகளை வழங்குவதில் RTA ஒரு முன்னோடி பங்கை வகிக்க முயல்கிறது. சமூகப் பொறுப்பை மேம்படுத்துதல், வாடிக்கையாளர் நடைமுறைகளை எளிமையாக்குதல் மற்றும் அனைத்து சமூக உறுப்பினர்களுக்கும் சேவைகளை வழங்குவதில் தனியார் துறையை ஈடுபடுத்துவதற்கான துபாய் அரசாங்கத்தின் உந்துதலுக்கு ஆதரவளிப்பதற்கான RTA இன் முயற்சிகளின் ஒரு பகுதியாக இது உள்ளது,” என்றும் மஹ்பூப் கூறியுள்ளார்.

மேலும் முதற்கட்டமாக காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை இந்த சேவை வழங்கப்படும். அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து, 24/7 சேவை கிடைக்கும். இந்த முன்முயற்சியானது பயணிகள் மற்றும் விமான நிலைய ஊழியர்களை அவர்களின் பரிவர்த்தனைகளின் செயலாக்கத்தை எளிதாக்குவதை இலக்காகக் கொண்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

RTA இணையதளத்தில் உள்ள தகவலின்படி, 21 வயதிற்குட்பட்டவர்களுக்கு ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தலுக்கு 100 திர்ஹம் (+Dh20 knowledge and innovation fee) மற்றும் 21 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு Dh300 (+Dh20 knowledge and innovation fee) கட்டணங்கள் வசூலிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Related Articles

Back to top button
error: Content is protected !!