அமீரக செய்திகள்இந்திய செய்திகள்

துபாயில் நடைபெற்ற இந்தியர் நலவாழ்வு பேரவையின் மாபெரும் ரத்ததான முகாம்..!

துபாயில் இந்தியர் நலவாழ்வு பேரவை துபாய் மண்டலம் சார்பாக மாபெரும் இரத்ததான முகாம் லத்தீபா மருத்துமனையில் உள்ள ரத்ததான மையத்தில் நடைபெற்றது.

 இந்தியர் நலவாழ்வு பேரவையின் அமீரக தலைவர் அதிரை அப்துல் ஹாதி தலைமையில், துணைத்தலைவர் ஏஎஸ். இப்ராஹிம், அமீரக துணைச்செயலாளர் பொறியாளர் முகம்மது கஜ்ஜாலி, மகளிர் அணி செயலாளர் டாக்டர் ஃபஜீலா ஆசாத் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

இதில் நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக அமீரக தொழிலதிபர் அகமது அல் ஹாசீமி, அமீரக தமிழ் தொழில் முனைவோர் மற்றும் திறனாளர் கூட்டமைப்பின் தலைவர் டாக்டர் பால் பிரபாகர், எஸ்.எஸ்.மீரான், தொழில் அதிபர் இளையான்குடி செய்யது அபுதாஹீர், சமூக ஆர்வலர் முனைவர் முஹம்மது முகைதீன், ஊடகவியலாளர் முதுவை ஹிதாயத், சிங்கப்பூர் ஹவுஸ் நசீர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் துபாய் மண்டல தலைவர் உமர் ஃபாரூக், மண்டல செயலாளர் கீழக்கரை ஜைனுல் ஆபிதீன், மண்டல துணை தலைவர் முஹம்மது பாரூக் , மண்டல பொருளாளர் அதிரை அப்துல் காதர், மண்டல துணை செயலாளர் மதுக்கூர் பைசல், மண்டல மருத்துவ அணி செயலாளர் மன்னை அமீன், லால்பேட்டை யாசர் அரபாத், திருப்பூர் கலீல் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

இந்த முகாமில் நூற்றுக்கு மேற்ப்பட்டோர் இரத்த தானம் செய்தனர். இறுதியாக இந்தியர் நலவாழ்வு பேரவை துபாய் மண்டலம் சார்பாக இரத்த தானம் செய்தவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

Related Articles

Back to top button
error: Content is protected !!