அமீரக செய்திகள்இந்திய செய்திகள்

UAE: மும்பையில் இருந்து அபுதாபிக்கு புதிய விமான சேவை வழங்கும் விஸ்தாரா..!

இந்தியாவில் விமான நிறுவனங்களுக்கு இடையே கடும் போட்டி ஏற்பட்ட நிலையில் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை விமான நிறுவனங்கள் அறிவித்து வருகின்றன. அந்த வகையில் தற்போது விஸ்தாரா ஏர்லைன்ஸ் நிறுவனம், மும்பையிலிருந்து அபுதாபிக்கு நேரடி விமானம் இயக்க இருப்பதாக அறிவித்துள்ளது.

அக்டோபர் 1 ஆம் தேதி முதல் இந்த விமானம் இயங்கும் என இந்நிறுவனம் அறிக்கை ஒன்றின் மூலம் அறிவித்துள்ளது. இதனால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்தியாவின் ஏர்லைன்ஸ் நிறுவனங்களில் ஒன்றான விஸ்தாரா அக்டோபர் 1ஆம் தேதி முதல் மும்பை மற்றும் அபுதாபி இடையே நேரடி விமானங்களை இயக்க இருப்பதாக அறிவித்துள்ளது. இது விஸ்தாராவின் 12வது வெளிநாட்டு விமான சேவைத்தளம் ஆகும்.

புதியதாக தொடங்கப்படும் மும்பை-அபுதாபி விமானங்களுக்கான முன்பதிவுகள் ஆன்லைன் டிராவல் ஏஜென்சிகள் மற்றும் பயண முகவர்கள் மூலம் தொடங்கியிருப்பதாகவும், விஸ்தாராவின் இணையதளம் மற்றும் iOS மற்றும் Android மொபைல் செயலிகள் உட்பட அனைத்து வழிகளிலும் முன்பதிவு செய்யலாம் என்றும் விஸ்தாரா தெரிவித்துள்ளது.

ஏற்கனவே துபாய்க்கு விஸ்தாரா விமான சேவை செய்து வரும் நிலையில் தற்போது அபுதாபிக்கு சேவை செய்ய இருப்பதை அடுத்து விஸ்தாராவின் 12வது வெளிநாட்டு தளமாக அபுதாபி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!