அமீரக செய்திகள்இந்திய செய்திகள்

இந்தியர்கள் துபாய்க்கு வரலமா? வந்தால் வேலை கிடைக்குமா..? விரிவான பதிவு

இந்தியர்கள் பலர் துபாய்க்கு சென்றால் நல்ல சம்பாரித்துவிடலாம் என்ற எண்ணித்திலேயே நினைத்துக் கொண்டுள்ளனர். இது அனைத்துமே கொரோனா காலத்தில் தலைகீழாகமாறிவிட்டது.

கொரோனா காலகட்டத்தில் துபாயில் வேலையில் இருந்த பலர், வேலையை இழந்து நாடு திரும்பினர். அதிலும் கொரோனா காலக்கட்டத்தில் புதிதாக துபாய்க்கு வேலை தேடி வந்தோர்களின் நிலைமை படுமோசம்.

பல்லாயிரக்கணக்கில் செலவளித்து துபாயில் சம்பாரித்து மீட்டுவிடலாம் என்ற எண்ணத்தில் இருந்தோர்கள், துபாயில் வேலை கிடைக்க லட்சக்கணக்கில் செலவளித்து வந்த உடையிலேயே நாடு திரும்பிய பலர் அதிகம்.

ஆனால், தற்போது துபாய் முற்றிலுமாக கொரோனாவிலிருந்து மீண்ட நகரமாக மாறிவிட்டது. இப்போது அங்கு தொழிலாளர்களுக்கான வேலைவாய்ப்புகள் எப்படி இருக்கிறது? தொழிலாளர்களின் நிலை என்ன? என்பதை காணலாம்.

கொரோனாவுக்கு பிறகு அமீரகத்திற்கு வேலைவாய்ப்பு நிலைமை எப்படி இருக்கிறது என்பதை தெரிந்துக்கொள்வோம்.

துபாயில் இருக்கும் ஒரு தொழிலாளர் கட்டிடம் என்பது இந்தியாவில் நடுத்தர மக்கள் வசிக்கும் குடியிருப்பு கட்டடங்களைப்போல இருக்கும். அங்கு அறைகளையும், சமையலறையும் சுத்தமாக பராமரிக்கப்படும்.

துபாயில் கட்டிடத் தொழிலாளர்களே அதிகம். கட்டிட தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் முகாம்களில் லட்சக்கணக்கான இந்தியத் தொழிலாளர்கள் இருக்கின்றனர்.

அதாவது புள்ளி விவரங்களின்படி இந்தியாவை சேர்ந்த 29 லட்சம் பேர் இங்கு வசிக்கின்றனர். அதில் தொழிலாளர்களின் எண்ணிக்கை மட்டும் 22 லட்சம். அதில் 10 லட்சம் பேர் கேரள மாநிலத்தை சேர்ந்தவர்கள் ஆகும்.

கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு மாதம் 2000 திர்ஹம்ஸ், அதாவது இந்திய மதிப்பில் 40 ஆயிரம் ரூபாய் ஊதியம் வழங்கப்படுகிறது.

துபாயில் கொரோனா தொற்று நோய் முற்றிலும் குறைந்த தற்போது இன்னும் பல துறைகளில் வேலைவாய்ப்புகள் அதிகரித்துள்ளன.

கட்டுமானப் பணியில் இந்தியத் தொழிலாளர்கள் மட்டுமல்ல, பொறியாளர்களும் பணிபுரிகின்றனர். இதற்கான மாதம் சம்பளம் 5 முதல் 10 ஆயிரம் திர்ஹம்ஸ் (1 லட்சம் முதல் 2 லட்சம் வரை) ஊதியம் கிடைக்கும்.

துபாயில் ஏற்கனவே வளர்ச்சியடைந்த இடங்களைத் தவிர, வேறு பல புதிய இடங்களும் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. எனவே இன்னும் பல ஆண்டுகளுக்கு இந்தியர்களுக்கு இங்கு வேலைவாய்ப்பு உறுதி என்றே சொல்லலாம்.

Related Articles

Back to top button
error: Content is protected !!