அமீரக செய்திகள்

உலகின் முதல் 100 தனியார் பள்ளிகளின் பட்டியலில் இடம்பிடித்த பத்து அமீரக பள்ளிகள்..!

2022 ஆம் ஆண்டின் ஸ்பியர்ஸ் பள்ளிகள் குறியீட்டின் ஒரு பகுதியாக, உலகின் முதல் 100 தனியார் பள்ளிகளில் 10 அமீரக பள்ளிகள் பெயரிடப்பட்டுள்ளன. உலகளாவிய கல்வி ஆலோசனை மற்றும் கார்ஃபாக்ஸ் கல்வி மற்றும் ஸ்பியர்ஸ் (Carfax Education and Spears) ஆகியவற்றால் உலகின் சிறந்த பள்ளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

அதில் Brighton College Abu Dhabi, The British School Al Khubairat, Cranleigh Abu Dhabi, Dubai College, Jumeirah College, Jumeirah English spoken School, Nord Anglia International School Dubai, NLCS Dubai, Repton School Dubai and Swiss Scientific International School in Dubai ஆகிய 10 பள்ளிகள் உலகின் முதல் 100 தனியார் பள்ளிகளின் பட்டியலில் இடம்பெறுள்ளன.

கல்வி முடிவுகள் மற்றும் பல்கலைக்கழக நுழைவுக்கான தயாரிப்பு போன்ற முறையான அளவுகோல்கள், பள்ளிகளின் தனித்துவமான நெறிமுறைகள், உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் நற்பெயர் மற்றும் கல்விக்கு அப்பாற்பட்ட வாழ்க்கைக்கு மாணவர்களை தயார்படுத்துவது தொடார்பான வழிகாட்டுதலின்படி 100 பள்ளிகள் பட்டியல் தயாரிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!