அமீரக செய்திகள்
UAE: அபுதாபியில் இந்திய மக்கள் பேரவையின் சார்பில் தொழிலாளர்களுக்கு உதவி..!

அபுதாபியில் இந்திய மக்கள் பேரவையின் சார்பில் தொழிலாளர்களுக்கு உதவிப் பொருட்கள் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு நலப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது. அந்த பேரவையின் தலைவர் ஜிதேந்திர வைத்யா தலைமையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மருத்துவ முகாமும் நடத்தப்பட்டது.
இந்த முகாமில் மருத்துவர்கள், அமீரக தொழிலதிபர்கள், அமீரக இந்திய தொழில் முனைவோர் மற்றும் திறனாளர் தொழிலாளர்கள், அபுதாபி மண்டல நிர்வாகிகள், சமூக ஆர்வலர்காள், ஊடகவியாலர்கள் என பலரும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். மேலும் நூற்றுக்கு மேற்ப்பட்டோருக்கு மருத்துவ முகாம் மேற்கொள்ளப்பட்டது. இறுதியாக இந்திய மக்கள் பேரவையின் சார்பில் மருத்துவ முகாம் மேற்கொண்டவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.