வளைகுடா செய்திகள்

சவூதி விசிட் விசாவை ரெசிடென்ஸ் விசாவாக மாற்ற முடியுமா..? பாஸ்போர்ட் அலுவலகம் விளக்கம்..!

சவுதி அரேபியாவிற்கு விசிட் விசாவில் வந்து தங்கியிருப்பவர்கள் அவர்களது விசாவை ரெசிடென்ஸ் விசாவாக (இகாமா) மாற்ற முடியாது என்று சவுதி பாஸ்போர்ட் அலுவலகம் தெளிவுபடுத்தியுள்ளது. விசிட் விசாவில் வருபவர்கள் ரெசிடென்ஸ் விசாவிற்கு மாறலாம் என சமூக வலைதளங்களில் பரவி வரும் செய்தியை பாஸ்போர்ட் அலுவலகம் மறுத்துள்ளது.

அதிகாரிகள் இது பற்றி தெரிவிக்கையில், “சவூதியில் அத்தகைய அமைப்பு நடைமுறைப்படுத்தப்படவில்லை. அவ்வாறு விசாவை மாற்ற உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளதாக சமூக வலைதளங்களில் செய்திகள் குவிந்துள்ளன. இது முற்றிலும் தவறானது. இதுபோன்ற போலி செய்திகளை உருவாக்குபவர்களுக்கு எதிராக சைபர் சட்டத்தின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெளிவுபடுத்தியுள்ளனர்.

அதேவேளை 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் விசிட் விசாவை ரெசிடென்ஸ் விசாவாக மாற்றலாம். இதற்காக, பெற்றோர் இருவரும் நாட்டில் ரெசிடென்ஸ் விசா வைத்திருக்க வேண்டும் என்று சவுதி பாஸ்போர்ட் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Related Articles

Back to top button
error: Content is protected !!