அமீரக செய்திகள்

UAE: 1,300 AED சம்பளத்தில் கார் கிளீனிங் வேலை பார்த்தவருக்கு அடித்த 10 மில்லியன் திர்ஹம்ஸ் ஜாக்பாட்.. ஒரே நாளில் மாறிய வாழ்க்கை..!!

அமீரகத்தில் நடைபெற்று வரும் மஹ்சூஸ் டிராவின் 94வது வாராந்திர ரேஃபிள் டிராவின் போது, ​​கார் கிளீனிங் வேலை பார்த்துக் கொண்டிருந்த கொண்டிருந்த நபர் ஒருவர் 10 மில்லியன் திர்ஹம்ஸ் பரிசுத்தொகையை வென்றுள்ளார்.

மாதம் 1,300 திர்ஹம்கள் சம்பளத்திற்கு கார் கிளீனராக பணிபுரிந்து வரும் நேபாளத்தைச் சேர்ந்த 31 வயதான பரத்திற்கு, ஒரே இரவில் வாழ்க்கை வெகுவாக மாறியுள்ளது. மெகா பரிசை வென்ற பரத், தனது பெயரில் வங்கிக் கணக்கு கூட இல்லை என்றும், வென்ற பெரும் பரிசுத் தொகையானது 345 மில்லியன் நேபாள ரூபாய்க்கு சமம் என்றும் வெற்றி பெற்றது குறித்து மகிழ்ச்சியுடன் இருப்பதாகவும் கூறியுள்ளார்.

மேலும் கூறுகையில் “இந்தப் பரிசுத்தொகையானது நான் பலவற்றை சாதிக்க உதவும். மஹ்சூஸ் பலரின் வாழ்க்கையை மாற்றும்” என்றும் கூறியுள்ளார். அத்துடன் “எனது கடன்களை இந்த பணத்தை வைத்து விரைவில் செலுத்த நான் திட்டமிட்டுள்ளேன். இப்போது மல்டி மில்லியனர் ஆகியிருந்தாலும் எளிய வாழ்க்கையே வாழ்வேன்” என்றும் கூறியுள்ளார்.

மஹ்சூஸ் டிராவில் ஐந்து வெற்றி எண்களையும் (16, 27, 31, 37, 42) சரியாக தேர்ந்தெடுத்த பரத், மஹ்சூஸ் டிராவின் முதல் பரிசை வென்ற முதல் நேபாளி மற்றும்  மஹ்சூஸ் டிராவில் வென்ற மில்லியனர்களில் 28 வது மில்லியனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!