UAE: துபாயில் தினமும் 2000 சட்டவிரோத மசாஜ் கார்டுகளை சாலைகளில் இருந்து துப்பரவுப்படுத்தும் பணியாளர்கள்.. முனிசிபாலிட்டி தகவல்..!

துபாயில் உள்ள துப்புரவு பணியாளர்கள் ஒரு நாளைக்கு குறைந்தது 2,000 சட்டவிரோத மசாஜ் செண்டர் கார்டுகளை சாலையில் எடுக்கின்றனர் என்று துபாய் முனிசிபாலிட்டி தெரிவித்துள்ளது. துபாய் எமிரேட்டின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் சுமார் 3,000 துப்புரவுப் பணியாளர்களால் அவை சேகரிக்கப்படுகின்றன என்று உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
துபாய் முனிசிபாலிட்டியின் கழிவு மேலாண்மைத் துறையின் முதன்மை மேற்பார்வையாளர் ஹனி ஷேக்கர் அல்-நுசைராத் கூறுகையில், “இந்த கார்டுகள் முறையாக அகற்றப்படுவதையும், சாலையில் வீசாமல் இருப்பதையும் உறுதி செய்யுமாறு பொதுமக்களை கேட்டுக்கொள்கிறோம்.”
கடந்த மாதம், 15 மாதங்களில் சட்டவிரோத மசாஜ் செண்டர்களை விளம்பரப்படுத்த 5.9 மில்லியன் கார்டுகளை கைப்பற்றியதாக துபாய் காவல்துறை தெரிவித்தது. மேலும் இந்த சேவைகள் சட்டவிரோதமானவை என்பதால், இதனை பயன்படுத்த வேண்டாம் என்று குடியிருப்பாளர்களுக்கு அதிகாரிகள் பலமுறை எச்சரித்துள்ளனர்.
“இந்ததுறையில் உரிமம் பெற்ற மற்றும் அங்கீகரிக்கப்பட்ட செண்டர்கள் மற்றும் நிறுவனங்கள் நாகரீகமற்ற முறையில் சாலைகளில் உள்ள வாகனத்தின் ஜன்னல்கள் மற்றும் பொதுச் சாலைகளில் விளம்பர அட்டைகளைத் சிதறவிட்டு தங்கள் வணிகம் மற்றும் சேவைகளை மேம்படுத்தி வருகின்றனர்” என்று அல்-நுசைராத் கூறினார்.
2021 மற்றும் 2022 முதல் மூன்று மாதங்களில் சட்டவிரோத சேவையை வழங்கியதற்காக 870 பேரை துபாய் காவல்துறை கைது செய்தது. இவர்களில் 588 பேர் பொது ஒழுக்கத்தை மீறியதற்காகவும், 309 பேர் அட்டைகளை அச்சடித்து விநியோகித்ததற்காகவும் குற்றம் சாட்டப்பட்டனர்.
துபாய் முனிசிபாலிட்டியின் உத்தவின்படி, மசாஜ் கார்டுகளை விநியோகிப்பது 2003 இல் வெளியிடப்பட்ட சட்ட எண். 11 பிரிவு 59-இன் படி நிர்வாக விதிமுறைகளை தெளிவாக மீறுவதாகும். “இது சுகாதார மற்றும் பொருளாதார சேதத்திற்கும் வழிவகுக்கும். இது தவிர, பொது ஒழுக்கங்களுக்கு முரணான பழக்கவழக்கங்கள் மற்றும் நடத்தைக்கு பொதுமக்கள் இழுக்கப்படுகிறார்கள், இது ஆபத்தை உருவாக்குகிறது” என்று அல்-நுசைராத் கூறினார்.